தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தினசரி பரிசோதனை 11 ஆயிரம் ஆக அதிகரிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தினசரி பரிசோதனை 11 ஆயிரம் ஆக அதிகரிக்க வேண்டும்

பொது சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை ஏப்.6  தமிழ்நாட்டில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற் போது 150-அய் கடந்துவிட்டது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத் துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தமிழ்நாட்டில் தினசரி 11 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், "நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பிப்ர வரி மாதத்தில் 50க்கு குறைவாக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 689 ஆக உயர்ந்தது.

இதேபோல் தொற்று பரிசோத னையில் கரோனா உறுதி செய்யப்படு வோர் சதவீதமும் 0.6 இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 5க்கு அதிகமாக உயர்ந் துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் (12.8%), கோயம்புத்தூர் (10.6%), காஞ்சிபுரம் (9.3%), கரூர் (7.8%), ஈரோடு (7.7), தூத்துக்குடி (7.1%), சென்னை (6.4%), திருவாரூர் (06%), மதுரை (5.8%) மற்றும் கடலூரில்(5.4%) கரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதம் உயர்ந்துள் ளது. எனவே, தற்போது மாநிலம் முழு வதும் 3000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை 11 ஆயிரமாக உயர்த்த வேண் டும். மாவட்டம் தோறும் மக்கள் தொகை ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் 4.4.2023 அன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் புதிதாக 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 -ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.  கடந்த ஆண்டு 163 நாட்களுக்கு (கடந்த ஆண்டு செப்.25க்கு பின்னர்) பிறகு கோவிட் பாதிப்பு 4,000 கடந்திருக்கிறது.

No comments:

Post a Comment