லேசான காய்ச்சலா? அஞ்சற்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

லேசான காய்ச்சலா? அஞ்சற்க!

புதுடில்லி, மார்ச் 16- 'லேசான காய்ச்சல், உடலில் உள்ள தொற்றுகளை வெளி யேற்றுகிறது; மேலும் உடல் நலத்தை அதிகரிக்கச் செய்கிறது' என, புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அல் பர்டா பல்கலை ஆராய்ச்சியா ளர்கள், காய்ச்சல் தொடர்பாக புதிய ஆய்வை நடத்திஉள் ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக் கையில் கூறப்பட்டு உள்ள தாவது: லேசான காய்ச்சல் ஏற்படும்போது, அதை அப் படியே விட்டுவிடுவது மிகச் சிறந்தது. இந்த காய்ச்சல், உடலில் உள்ள தொற்றுகளை வெளியேற்றி விடும்; உடல் அழற்சியை கட்டுப்படுத்துவ துடன், திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளையும் சீர்செய் கிறது. மருந்துகள் எடுத்துக் கொள்வதைவிட, லேசான காய்ச்சல் இயற்கையாக உட லுக்கு பல நன்மைகளை ஏற் படுத்துகிறது. மீன்களிடம் நடத் தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும், இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே, மருந்துகள் எடுத்துக் கொள் வதை தவிர்ப்பது எப்போதும் நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment