(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
ஆளுநர் ரவியும் - காரல் மார்க்சும்
மின்சாரம்
இந்திய சமூகம் பற்றி
காரல் மார்க்ஸ்
"ஆதி காலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள் மூலம், இந்தியா வில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான், உலகில் கிறிஸ்தவ சகாப்தம் உதயமாவதற்கு முன்பே, இந்தக் காரியங்களைச் செய்தவர்கள் அவர்கள். கிராமங்களில் உண்டாக் கப்பட்ட சிறுசிறு வகுப்புகள், ஜாதிப் பிரிவினை களாலும், உயர்வு தாழ்வுப் பிரிவினைகளாலும் அடிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பேதங்கள் மனிதனை வெளியிலிருக்கும் நிலைமைகளுக்கு அடிமையாக்கின. சூழ்நிலைகளை ஆட்டிப் படைக்க வேண்டியவன் அவைகளுக்கு அடி பணிய நேர்ந்தது. இதனால் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய சமுதாயம் மாறாத நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் மிருகங்களை வணங்க வேண்டியவனானான். இயற்கையைக் கட்டி ஆளவேண்டிய மனிதன், குரங்கை அனுமான் என்றும், பசுவை சப்பலா என்றும் நம்பிக்கொண்டு அடிபணிந்து கும்பிட லானான்."
- காரல் மார்க்ஸ் (British Rule in India என்ற நூலில்)
‘ஹிந்து சமயம் - ஹிந்து மதம்' என்பது ஒரு மதமே அல்ல. ‘ஹிந்து' சமயம் என்பது பார்ப் பனரின் கோட்பாடுகளும் புரட்டுகளுமேயாகும். ஹிந்து சமயத்தில் இன்று உள்ளடங்கியுள்ள ஜாதிகள் முரண்பட்டு செயல்படுகின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட ஹிந்துவுக்கும் முற்பட்ட, பிற்பட்ட ஜாதி ஹிந்துவிற்கும் தாழ்த்தப்பட்ட ஹிந்து வுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பகை உறவு களைவிட தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இசுலாமி யருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிறிஸ்த வர்களுக்கும் நல்ல உறவுகள் நிலவுகின்றன. இதே நிலை பிற்பட்டவர்களுக்கும் மற்ற மதத் தினருக்கும் பொருந்தும்.
- காரல் மார்க்ஸ்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி
லண்டன், ஜுன் 10, 1858
"... சமுதாய நோக்கில் ஆராய்ந்தால் ஹிந்துஸ்தானத்தை கீழ்த்திசையின் இத்தாலி என்று கணிக்க முடியாது. கீழ்த்திசையின் அயர்லாந்து என்றே கூற வேண்டும். இவ்வாறு இத்தாலியும் அயர்லாந்தும் சிற்றின்ப ஈடுபாட்டு உலகமும் மிகு துயர் வருத்தும் உலகமும் வியப் பான முறையில் சேர்ந்திருப்பதை ஹிந்துஸ்தான சமயத்தின் பண்டைய மரபுகள் முன்பே உணர்ந்து புலப்படுத்தயிருக்கின்றன. அந்த மதம் புலனுணர்ச்சி இன்பங்களில் மூழ்கித் திளைப் பதை வலியுறுத்தும் மதமாக உள்ளபோதே, தன் னைத்தானே வதைத்துக் கொள்ள வேண்டு மென்று வற்புறுத்தும் துறவு மதமாகவும் விளங்கு கின்றது. லிங்கத்தை வழிபடும் சமயமும் அதுவே, ஜகநாதனின் மதமும் அதுவே. தேவதாசி மதமும், அதுவே. சன்னியாசியின் சமயமும், அதுவே, இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும், சமுதாய நிலை மாறவில்லை. பண்டு ஒழிந்த காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மாறவேயில்லை. இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் சாதுக்களாகத் தோன்றியபோதிலும், கீழ்க்கண்ட கொடுங்கோன்மைகளுக்கு திட்ட மான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது. அந்தச் சமூகங்களின் மனித மூளையைச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து அதைவிட நம்பிக்கையின் சுலபமான கருவி களாகவும் பரம்பரைச் சம்பிரதாய விதிகளின் அடிமையாகவும் ஒதுக்கியதையும், சகல வகைப்பட்ட சிறப்புகளையும் சரித்திரபூர்வமான சக்திகளையும் மனித மூளை பெற முடியாமல் செய்ததையும் நாம் மறக்க முடியாது.
சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்து கொண்டு சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி அடைவதையும் வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும் பெரிய நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சமூகங்களின் காட்டு மிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது... அவை மனிதனது சிந்தையைக் குன்றிய வட்டத்தில் சுழலச் செய்து அதனை மூடநம்பிக்கைக்கு ஏற்ற கருவியாகவும் மரபின் அடிமையாகவும் செய்து, அதன் மேன்மை முழுவதையும் வரலாற்றுப் படைப்பாற்றல் அனைத்தையும் இழக்கச் செய்துவிட்டன என் பதையும் நாம் மறப்பதற்கில்லை. பேரரசுகளின் அழிவையும் சொல்வதற்கு முடியாத கொடுமை மள் நிகழ்ந்ததையும் பெரிய நகரங்களில் மக்கள் படுகொலைகளானதையும் ஏதோ இயற்கை நிகழ்ச்சிகளைக் காண்பது போல் பார்த்துக் கொண்டு வாளாவிருந்த இக்கிராம சமூகங்களது தன்னகங்காரத்தை - இவ்வளவுக்குமிடையில் தம் துண்டு துக்கடா காணி நிலத்தின் சாகுபடியிலேயே கண்ணும் கருத்துமாயிருந்த அவற்றின் செருக்கையும் மறக்கக்கூடாது...
மாண்புக்கும் முன்னேற்றத்திற்கும் இடமில் லாத இந்த தேக்கமான செயலற்ற வாழ்க்கை, நேர்மாறான விளைவுகளை உண்டாக்கி, குறியோ நெறியோ இல்லாத அழிச்சக்திகளைத் தாண்டவமாடச் செய்து, நரபலியையே ஹிந் துஸ்தானத்தின் சமயச் சடங்காக ஆக்கியது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. இந்த சிறு சமூகங்கள் ஜாதி வேற்றுமையாலும் அடிமை முறையாலும் கெட்டிருந்தன என்பதையும், அவை மனிதனை புற நிலைமைகளுக்கு எஜமானராக்குவதற்குப் பதிலாக அவற்றுக்கு அடிமைப்படுத்தின என்பதையும்... இயற்கையை ஆட்சிபுரிய வேண்டிய அதிபனாகிய மனிதன், குரங்காகிய அனுமானுக்கும் பசுவாகிய சபலைக் கும் தண்டனிட்டு மரியாதை செலுத்த நேர்ந்ததில் இக்கிராம சமுதாயங்களின் இழிநிலை புலனா கிறது.
(நியூயார்க் டெய்லிடிரிப்யூன் இதழ், 3804இல்
1853 ஜூன் 20இல் வெளியானது.
ஆதாரம்: இந்தியாவைப் பற்றி... காரல் மார்க்ஸ், பிரெடரிக் ஏங்கல்ஸ், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், நல்லதம்பி செட்டித் தெரு, சென்னை-2 (1971) பக். 17-29)
ஆளுநர் ரவி காரல் மார்க்சைக் குறை கூறுவதன் பொருள் இப்போது புரிகிறதா?