ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 9.3.2023

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காஷ்மீர் பிரச்சினையில் நேரு, தவறு இழைத்து விட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக,  தனது இராணுவ அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் நேரு செயல்பட்டதாக அரசின் ஆவணங்கள் நிரூபிக்கின்றன என்கிறது கார்டியன் இதழ்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* திருச்சி அருகே உள்ள கோயிலில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ் நாடு அரசு மேல் முறையீடு செய்திட வேண்டும் என பாதுகாப்பு மய்யத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ் வாஞ்சிநாதன் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment