ஜி-பே மூலம் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

ஜி-பே மூலம் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 10- கூகுள்பே எனப் படும் ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு 'ஹேக்' செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் காவல்நிலையம் வந்து பணமாக எடுத்து கொள்ளச் சொல்லுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரி வர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஅய் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஅய் வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி உள்ளது. பயன்படுத் துவதற்கு வசதியாகவும் சில வினாடி களில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஅய் மூலமாக பணம் செலுத்து வதையே விரும்புகின்றனர்.

இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொ ருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. இதனால் பயனர்கள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையே விரும்பு கின்றனர். உணவு விடுதி, டீக்கடை, மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் யுபிஅய் மூலமாக பணம் செலுத்தும் வசதியுள்ளது. அதேவேளை யில் எந்த அளவிற்கு எளிமையாக மாறுகிறதோ, அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன.

இந்நிலையில் யாரோ ஒருவர் தவ றாக உங்கள் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டதாக கூறி பணம் திருப்பி கேட்டால் உடனடியாக காவல்நிலை யத்தை அணுகுமாறும் தெரியாத நபர் கள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினாலும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment