ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கைப் பணம் நீரில் நனைந்து நாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கைப் பணம் நீரில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம், மார்ச் 10- பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கோயில் உள்ளது. இங்கு, உட்பிரகாரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தற்காலிக உண்டியல் இந்து சமய அற நிலையத்துறை மூலம் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் காணிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி முன்னிலையில் திறந்து எண்ணப்படும். 

அந்தவகையில், 6.3.2023 அன்று இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண் ணும் பணி தொடங்கியது. அப்போது, 3 உண்டியல்களில் உள்ள 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் நீரில் நனைந்து நாசமானது தெரியவந்தது. மழை சாரல்பட்டு பணம் நனைந்ததாக கூறப்படுகிறது.  தாங்கள் கடவுளுக்கென்று காணிக்கை செய்த பணம் நீரில் நனைந்து நாசமான நிகழ்வு பக்தர்களிடையே கடவுள் சக்திமீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment