ஆப்கானில் மதவாதிகளால் பறிக்கப்படும் மகளிர் உரிமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

ஆப்கானில் மதவாதிகளால் பறிக்கப்படும் மகளிர் உரிமை

காபூல், மார்ச் 18- ஆப்கானிஸ் தான் பெண்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பெற்ற விவாகரத்து செல்லாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற் றதில் இருந்தே பெண் களுக்கு எதிரான சட் டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக் கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல் வேறு பழைமைவாதச் சட்டங்களையும் அமல் படுத்தியுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தாலிபான் அரசு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட் சியின் போது பெண்க ளுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்று அறிவித்துள்ளது. மேலும், கணவர் மதுவிற்கு அடிமையாகி இருந்தாலோ அல்லது வெளிநாட்டிற்குத் தப்பித் துச் சென்றிருந்தாலோ விவாகரத்து செல்லும் எனவும் தெரிவித்துள் ளது. ஆப்கானில் 10இல் 9 பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாக அய்.நா. தெரிவித்திருந்த நிலை யில், தற்போது விருப்பம் இல்லாத பெண்களையும் கணவருடன் சேர்ந்து வாழ வலுக்கட்டயமாக அனுப்பி வைக்கும் செயல் இது என பலரும் கண் டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment