ஒன்றிய அரசின் மானியங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காதாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

ஒன்றிய அரசின் மானியங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காதாம்

சென்னை, மார்ச் 22- வரும் ஆண்டுகளில் ஒன் றிய அரசின் மானியங் கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது என்று நிதித் துறை செயலாளர் முரு கானந்தம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:- 

வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டுடன் 9.62 விழுக்காடு உயர்ந்திருக் கிறது. மொத்த மதிப்பா னது ரூ.3,65,321 கோடி யாக இருக்கிறது. வருவா யைப் பொறுத்தவரையில் 10 விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கி றோம். ஒன்றிய அரசின் மானியம் குறையும் ஒன் றிய அரசிடம் இருந்து முக்கிய சில இனங்களில் இருந்து கூடுதலாகக் கிடைக்க வேண்டியுள் ளது. 

ரூ.4,500 ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகை வர வேண்டியுள்ளது. உணவுத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி  வர வேண்டியிருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பு ஒன்றிய அர சிடமிருந்து ரூ.20 ஆயிரம் கோடி வந்து கொண்டிருந்தது. அது வும் 30.6.2022 ஜூன் மாதத்துடன் நின்று விட் டது.

இந்த ஆண்டிற்கு மட் டுமே 15 ஆயிரம் கோடிக்கு வருவாய் குறைந்துள்ளது. இது வரும் ஆண்டில் ரூ.20,000 கோடியாக வருவாய் குறையும்.  கடன்கள் வாங் குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.85 ஆயிரம் கோடி வரை வாங்க நிர்ணயிக் கப்பட்டாலும், இந்த நிதி யாண்டு ரூ.75 ஆயிரம் கோடி வாங்க உள்ளோம். இதுவரையில் ரூ.72  ஆயி ரம் கோடி வாங்கியுள் ளோம். 

இந்த மார்ச் இறுதிக் குள்ளாக ரூ.3 ஆயிரம் கோடி கடன் வாங்கு வோம். 15ஆவது நிதிக் குழு நிர்ணயித் துள்ள அளவை விட குறைவா கவே கடன் அளவு உள்ளது.

அரசு மதுபானங்கள் மூலமாக, நிகழாண்டில் ரூ.45  ஆயி ரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள் ளது. கடந்தாண்டு ரூ.36 ஆயிரம் கோடி கிடைத் தது. வரும் நிதியாண்டில், ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர் பார்க்கிறோம். இந்த ரூ.50 ஆயிரம் கோடியில், கலால் வரிகள் மூலமாக, ரூ.12 ஆயிரம் கோடியும், மதிப்புக் கூட்டு வரி ரூ.38 ஆயிரம் கோடியும் கிடைக்கும். செலவுகள் எதையும் குறைக்க வில்லை. அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக் கும் கூடுதலாகவே நிதி அளித்துள்ளோம். 

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment