வடநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினை பொய் வீடியோவைப் பரப்பியவர் பீகாரில் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

வடநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினை பொய் வீடியோவைப் பரப்பியவர் பீகாரில் கைது

பாட்னா மார்ச் 7 தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவது போன்ற காட்சிப் பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங் களில் பரவியது. இது தமிழ்நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது. 

புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய் யான தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளதாகவும், இந்த பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய் யப்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழ் நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவ தாக வதந்தி பரப்பிய ஒரு நபரை பீகார் காவல்துறை கைது செய்திருப்பதாக ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரி வித்தார். போலியான பதிவை வெளியிட் டவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற் காக 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது எனவும், ஏடிஜிபி கூறினார். கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் என்பது தெரியவந்துள்ளது. தவறான தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி யதாக பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது அலைபேசியில் அது போன்ற பல காட்சிப் பதிவுகள் இருந்த தாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment