அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பழகுநர் பயிற்சி சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பழகுநர் பயிற்சி சேர்க்கை

சென்னை, மார்ச் 23 அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 2023 ஆண்டிற்கான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசினர் பயிற்சி நிலைய வளாகத்தில் 2023ஆம் ஆண்டிற்கான நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை( பயிற்சி பிரிவு) சார்பில் பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம்  (Trade Apprentices Engagement Fair) வருகின்ற 24.03.2023 அன்று காலை 9:00 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரை அம்பத்தூர் அரசினர் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பிட உள்ளன. NCVT  மற்றும் SCVT முறையில் அரசு மற்றும் தனியார் அய்டிஅய்-யில் தேர்ச்சி பெற்ற, இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பயிற்சியாளர்கள், மற்றும் 8-ஆம் வகுப்பு, 10-வகுப்பு, 12-ஆம் வகுப்பு, மற்றும் டிப்ளோமா மற்றும் டிகிரி கல்வி தகுதியுடைய மாணவ மாணவியர்களுக்கு நேரடியாக தொழிற் பழகுவதற்காக அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற் பழகுநர் பயிற்சி பெற்று அசல் தேதியை தொழிற்பழகுநர் சான்றிதழ்  (NAC) சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கு முன்னுரிமையும், வயது அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.


தொலைதூரக் கல்வி சேர்க்கை 

மார்ச் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இக்னோ அறிவிப்பு

சென்னை, மார்ச் 23 இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னைமண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம்  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு தொலை தூரக் கல்வி ஜனவரி பருவத்துக்கான சேர்க்கை மார்ச் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொலை தூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணைய வழி (https://ignouadmission.samarth.edu)  வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்  (www.ignou.ac.in)  அறிந்துகொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் வகுப்பினருக்கு கல்விக் கட்ட ணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment