பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பா.ஜ.க.வுக்கு 'தினமலரே' பதிலடி!

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தலைமை... வியூகம்! 

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தலைமை முழு வீச்சில் தயாராகி வருகிறது. அசத்தலான தேர்தல் வியூகங்களுடன் முக்கிய நிர்வாகிகள் கள மிறங்கவுள்ளனர். 160 தொகுதிகள் அடை யாளம் காணப்பட்டு, அவற்றுக்கு வகுக்கப் பட்டுள்ள தேர்தல் வியூகங்களை நேரடியாக கண்காணிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனர்.

அடுத்தாண்டு நடக்கஉள்ள லோக்சபா தேர்தலில் வெற்றிக்கான வியூகங்கள் வகுப் பதில், பா.ஜ., மேலிடத் தலைவர்கள் மும் முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடில்லி தலைமை அலுவலகத்தில், இதற்கென பல்வேறு கட்ட ஆலோசனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை கையில் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்த தொகுதிகள் அனைத்துமே, 2019 தேர்தலில் பா.ஜ., கைநழுவிய தொகுதிகள்.

இந்த தொகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படவுள்ளது. 2024 தேர்தலில் எப்படியும், இந்த தொகுதிகளில் கடும் உழைப்பை செலவிட்டு வெற்றியை ஈட்டி யாக வேண்டுமென்பதே திட்டம்.

அதற்கான பல்வேறு யுக்திகளை ஆய்வு செய்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் ஒரு குழு சமீபத்தில் அறிக்கை அளித்திருந் தது. இந்நிலையில்தான், இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில், தலைவர்கள் இறக்கி விடப் பட்டுள்ளனர்.

பா.ஜ., தேசிய பொதுச்செயலர்கள் சுனில் பன்சல், வினோத் தாவ்தே, தருண் சுக் ஆகிய மூவரிடம் இந்த 160 தொகுதிகளுக் கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இந்த 160 தொகுதிகளும் முதற்கட்டமாக வெவ்வேறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும் 4 அல்லது 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொகுப்புகள் ஒவ்வொன்றிலும், பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து பேரணி பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதன்படி, 45 - 55 பேரணிகள், பொதுக் கூட்டங்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்தொகுதிகளுக்கான பிரதமரின் பய ணம் மத்திய - மாநில அரசுகளின் நலத்திட் டங்களின், துவக்க விழாக்களாக இருக்கலாம் அல்லது முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவாக இருக்கலாம்.

மற்றொரு கோணத்தில், இதே 160 தொகுதிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவின் கீழும், 80 தொகுதிகள் வரையில் கவனத்தில் எடுக்கப்படவுள்ளன.

முதல் 80 தொகுதிகளை, உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார்.

இன்னொரு 80 தொகுதிகள் பா.ஜ., தலை வர் நட்டாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

இவர்கள் இருவரும், தத்தமது 80 தொகு திகளை தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டே இருப்பர்.

நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். 2024 தேர்தலுக்கு முன்பாக இந்த தொகுதிகளுக்கு மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், மக்கள் மத்தியில் அறிமுகமான பிரபலங்கள் என தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டே இருப்பர்.

ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் பெயரில் இவர்கள், இந்த 160 தொகுதிகளை வலம் வந்தபடி இருக்கும் வகையிலும், தேர்தலுக்கு முன் வெற்றிக்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையிலும், திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்த 160 தொகுதிகளுக்கான செலவு, பிரசார வசதிகள் என, அனைத்துமே மற்ற தொகுதி களைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே இருக்கும் வகையிலும்நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

45 குழுக்கள் அமைப்பு!

லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவ தற்காக பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு என, 45 குழுக்களை கட்சிக்குள் அமைத்துள்ளார் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா. மூத்த அமைச்சர்கள் இந்த குழுக்களுக்கு தலைமை ஏற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைவராக உள்ளார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேசவும், அவர்களுடன் சுமுகமான உறவை நிலை நாட்டவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த குழுவிற்கு தலைவர். கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதுதான் முக்கிய பிரச்னை; இதை சமாளிக்க அமித் ஷா தான் சிறந்தவர் என்பதால், அவருக்கு இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது. ஊடகங்கள் நடத்தியுள்ள தேர்தல் கணிப்பில் பா.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.'கருத்துக் கணிப்பை பொருட் படுத்தாமல் களத்தில் இறங்கி கடுமையாக உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்' என, கட்சியினருக்கு ஊக்கம் அளித்து வருகிறார், பிரதமர் மோடி.

- ‘தினமலர்', 12.3.2023 பக். 7


'இதைத் தான் எதிர்பார்த்தோம்!'

'இதை முதலிலே செய்திருந்தால், இவ் வளவு அவஸ்தைப்பட வேண்டியது இருந் திருக்காதே...' என, மேற்கு வங்க கவர்னர், அனந்த போசை கிண்டலடிக்கின்றனர் இங்குள்ள பா.ஜ., நிர்வாகிகள். இங்கு முதல் வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே கவர் னராக இருந்த ஜக்தீப் தன்கர், முதல்வர் மம்தாவுடன் கடும் மோதல் போக்கில் ஈடுபட்டார்.

இருவரும் வீதியில் இறங்கி அடிதடி சண்டையில் ஈடுபடாதது மட்டும் தான் நடக்கவில்லை. மற்றபடி, கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன், ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அனந்த போஸ், மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப் பட்டார். ஜக்தீப் போல, இவரும் மம்தாவுடன் மோதலில் ஈடுபடுவார் என, இங்குள்ள பா.ஜ.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் நட்பு பாராட்டினார்.

பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். மம்தாவை, 'மிகச் சிறந்த கவிஞர்' என, பாராட்டி பேசினார் போஸ். இங்குள்ள பா.ஜ.,வினர், கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. இதை யடுத்து, மேற்கு வங்க மாநில பா.ஜ.,வினரிட மிருந்து, டில்லி மேலிடத்துக்கு புகார் கடிதங் கள் பறந்தன. அனந்த போஸ் டில்லிக்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கு அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன. திரும்ப கொல்கத் தாவிற்கு வந்த கையோடு, 'மேற்கு வங்கத் தில், சட்டம் - ஒழுங்கு மோசமாகி விட்டது...' என, சூடாக அறிக்கை வெளியிட்டார், போஸ்.

பா.ஜ.,வினரோ, 'இதைத் தான் எதிர் பார்த்தோம்....' என, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.

- ‘தினமலர்', 12.3.2023, பக்கம் 8


விலகலை தடுக்க பா.ஜ. வியூகம் 

கட்சியினருக்கு அரசு பதவிகள்

தமிழக பா.ஜ.,வில் இருந்து வெளியேறுவ தைத் தடுக்க, முக்கிய நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பதவிகளை வழங்க, அக்கட்சி யின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த 11 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.,வில் சரிவர கட்சி பணியாற் றாமல், தன்னை மட்டும் முன்னிலைப்படுத் தும் நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப் படுகின்றன. இதனால், அதிருப்தியில் உள்ள வர்கள், பா.ஜ.,வில் இருந்து வெளியேறி, மாற்று கட்சிகளில் இணைகின்றனர்.

பா.ஜ., நிர்வாகிகளை இழுக்கும் பணி களில், திராவிடக் கட்சிகளும் முனைப்பு காட்டுகின்றன. இந்த விபரம், டில்லி மேலி டத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட் டது.

பா.ஜ.,வில் இருந்து நிர்வாகிகள் வெளி யேறுவதை தடுக்க, கட்சியில் தீவிரமாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், ஆணை யங்கள் போன்றவற்றில் உறுப்பினர், இயக்கு னர்கள் உள்ளிட்ட பதவிகள் வழங்க, தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.

அதற்கு ஏற்ப, அவர்களின் பட்டியலை, தமிழக பா.ஜ., தலைமை பரிந்துரை செய்து வருகிறது.

இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட் டவர்கள், மத்திய அரசின் வாரியங்கள், நிறுவனங்களில் உறுப்பினர், ஆலோசகர் போன்ற பதவிகளில் உள்ளனர்.

இது தவிர, 11 நிர்வாகிகளின் பெயர்கள், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

- ‘தினமலர்', 12.3.2023 பக்கம் 7


No comments:

Post a Comment