Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மோடி பேசியது எல்லாம் மறந்து விட்டனவா?
March 16, 2023 • Viduthalai

ஜூன் 2015-இல் பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, “வங்க தேச பிரதமர் பெண்ணாக இருந்தபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாதென அறிவித்ததில் நான் சந்தோஷ மடைகிறேன்” எனப் பேசினார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா குறித்த, பாலின பாரபட்சம் நிறைந்த இந்தப் பேச்சால் இந்தியாவின் தரம் பன்னாட்டு அளவில் குறைந்துவிட்டதாக கடும் கண்டனங்களை எதிர்கட்சிகளிடமிருந்து மோடி சம்பாதித்துக் கொண்டார்.  

2015ஆம் ஆண்டின் மே மாதம், தென் கொரியத் தலைநகரான சியோலில் வாழும் புலம்பெயர் இந்தியர்களிடையே ஆற்றிய உரையில், ”கடந்த காலத்தில் (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) மக்கள் இந்தியாவில் பிறந்ததற்கு என்ன பாவம் செய் தோமென வருத்தப்பட்டார்கள்" எனக் கூறினார். அவரது கருத்து எதிர்க்கட்சிகளிடம் பெரும் கோபத்தைக் கிளப்பியது. சமூக வலைத் தளங் களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  டொரண்டோ நகரின் ரிகோ கொலிசியத்தில் புலம்பெயர் இந்தி யர்களிடையே பேசுகையில் முந்தைய இந்திய அரசாங்கங்களை   கேலி பேசிய மோடி, “முன்பெல் லாம் (காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது) இந்தியாவின் அடையாளம் என்பது ஊழலாக இருந்தது. நாங்கள் அந்த அடையாளத்தை திறன் கொண்ட இந்தியா என மாற்றியிருக்கிறோம்,” என்றார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சீனா சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் "முன்பு நீங்கள் இந்தியராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது எனது நாடு இந்தியா என்பதில் பெருமைப்படுகிறீர்கள்” என்று கூறினார்.

இப்படியெல்லாம் பேசியவர் தான் பிரதமர் மோடி; இந்த நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியா குறித்து கேவலமாகப் பேசி விட்டார், இது மாபெரும் தலைக் குனிவு என்றும், மானம் கப்பலேறி விட்டது என்றும் பிஜேபியினர், சங்பரி வார்கள் கதறுவதை நினைத்தால் நகைச்சுவை யாகத்தான் இருக்கிறது.

தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில் இந்தியாவிலிருந்து இந்திய நிலையைக் குறித்துக் கருத்துத் தெரிவித்தாலும், அடுத்த நொடியில் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இறக்கை கட்டிப் பறந்து விடும். இதில் என்ன வெளிநாடு, உள்நாடு?

ராகுல்காந்தி பேசியதில் என்ன குறை -  தவறாக அவர் எதைப் பேசினார் என்பதைப்பற்றி விமர்சிப் பதை விட்டு விட்டு, துரும்பு கிடைத்தாலும் தூணாக்கிப் பேசுவது எல்லாம் பச்சை அரசியலே! 

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, "எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்லுவேன்?" என்று கேட்டாரே - அதன் உள்ளடக்கம் என்ன?

மோடிக்குப் பல நாடுகளிலும் விசா மறுக்கப் பட்டதுண்டே, என்ன காரணம்? கண்ணாடி வீட் டிலிருந்து கல்லெறியும் வகையறாக்கள் ஒருமுறை தம் முகத்தை நிலைக் கண்ணாடி முன்னின்று பார்ப்பது நல்லது!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn