‘காலை உணவு’ திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை உயர்வு முதலமைச்சர் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

‘காலை உணவு’ திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை உயர்வு முதலமைச்சர் பெருமிதம்

சென்னை மார்ச் 16  பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று,  நாளிதழில் வெளியான செய்தியை  குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் ‘காலை உணவு’ திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத் திட்டத்தின்கீழ் முதல் கட்ட மாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2ஆ-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். அப் போது, ‘‘மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற் றுள்ளது. எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்’’ என்று முத லமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவர்கள் வருகைஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,543பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் 1,319 பள்ளி களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.அது மட்டுமின்றி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘காலை உணவு’ திட்டம் செயல் படுத்தப்படும் தொடக்கப் பள்ளி களில் 100 விழுக்காடு வருகை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%), நீலகிரி (96.8%) மாவட்டங்களிலும் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் 20 சதவீதமும், 22 பள்ளிகளில் 40 சதவீதமும் மாணவர்கள் வருகை அதிகரித் திருப்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறும்போது, ‘‘காலை உணவு திட்டம் மூலம் தினமும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். காலை உணவுக்காக மாணவர் ஒருவருக்கு அரசு ரூ.12.71 செலவிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாணவர் வருகை அதிகரிப்பு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கை அடிப்படையில், ஆங்கில நாளிதழில் சங்கீதா கந்தவேல் எழுதியுள்ள செய்தி. கல்வி.. திராவிட வேட்கை’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment