ரஷ்ய அதிபருக்கு கைது வாரண்டு உக்ரைன் மீதான போர் குற்றம் பன்னாட்டு நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

ரஷ்ய அதிபருக்கு கைது வாரண்டு உக்ரைன் மீதான போர் குற்றம் பன்னாட்டு நீதிமன்றம் ஆணை

ஆம்ஸ்டர்டாம், மார்ச் 18 ரஷ்ய படையினர் மீதும் உக்ரைன் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

 ரஷ்யாவின் படையானது பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டு வீசுகிறது. படை வீரர்கள் உக்ரைன் பெண்களை மிரட்டி வன்புணர்வு செய்கின்றனர் என தொடர்ச்சியாக குற்றங்களை சுமத்தி வருகிறது. அதோடு போர் விதிகளை மீறி ரஷ்யா பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள பன்னாட்டு  நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப் பட்டுள்ளன. 

இந்நிலையில் தான் உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்படுவது தொடர்பான புகார்கள் எழுந்தன. இது போர்க்குற்றம் என உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது. இந்த புகார் பற்றி விசாரணை நடத்திய பன்னாட்டு நீதிமன்றம் போர்க்குற்றம் என தெரிவித்து புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


No comments:

Post a Comment