அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியிலிருந்து விலகி விடுவேன்: பிஜேபி கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியிலிருந்து விலகி விடுவேன்: பிஜேபி கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாம்!

சென்னை,மார்ச்18- தமிழ்நாடு பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற் றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. 

கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கர வர்த்தி தலைமை தாங்கி னார். அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். 

கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட் டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கருநாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவ தால் வருகிற மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சிப் பணிகளில் அதிக அளவு ஈடுபட்டு இருப்பேன்.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட் டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியிலிருந்து விலகிவிடு வேன். சாதாரண தொண் டனாகவே கட்சிப் பணி களை செய்வேன். இவ் வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, கூட்டத்தில் இருந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். தொடர்ந்து, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

இதே நேரத்தில் ஏராளமானோர் அண்ணா மலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப் பினர். இத னால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர், வானதி சீனிவாசன் சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மய்ய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசு கிறீர்கள்? என்று கேட்டார்.

இதனால் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர் கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment