ஜாதியின் அடையாளம் ரத்தமா? ஜாதிவெறியின் சிண்டு விறைக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

ஜாதியின் அடையாளம் ரத்தமா? ஜாதிவெறியின் சிண்டு விறைக்கிறது!

கேள்வி: மதம் மாற உரிமை உண்டு. ஆனால், ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு?

பதில்: மனம் சம்பந்தப்பட்டது மதம். மாறலாம்; ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி, மாறாது.

- 'துக்ளக்', 22.3.2023, பக்கம் 8

இப்படி எழுதும் குருமூர்த்தி மிகப்பெரிய அறிவாளியாம்! தன் முதுகில் டமாரம் கட்டிக்கொண்டு அடித்துக் குதிக்கிறார்.

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஒரே குரூப் ரத்தம்தானா? பார்ப்பனர்கள் அனைவருக்கும் ஏ1 பி பாசிட்டிவா? நெகட்டிவா? 

முதலியார் எல்லாம் பி பாசிட்டிவா? நெகட்டிவா?

வன்னியர்கள் ஏபி பாசிட்டிவா? நெகட்டிவா?

முக்குலத்தோர், எல்லாம் 'ஓ' பிரிவைச் சேர்ந்தவர்களா? பட்டியலின மக்கள் எந்த இரத்தப் பிரிவிலும் வரமாட்டார்களா?

அறிவியல் கண்டுபிடித்தது நான்கு இரத்தப் பிரிவு!

ஆரியர்கள் கண்டுபிடித்தது நான்கு வகை வருணாசிரமம்!

ஏன், ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம்கூட ஒரே குரூப் ரத்தம்தானா?

இந்த அடிப்படைக் கூடத் தெரியாததுகள் எல்லாம் மெத்த படித்த மே(ல்)தாவிகளா? சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி குடும்பத்திலேயே ரத்தக் கலப்பு ஏற்பட்டது தெரியுமா?

தெரியாமல் எழுதவில்லை. நன்னா தெரியும்தான். தன்னை முட்டாளாக்கிக் கொண்டாலும் பரவாயில்லை, ஜாதியை நிலை நிறுத்த வேண்டும் என்ற உயர்ஜாதி ஆணவ ஆதிக்க வெறியின் சிண்டுதான் விறைத்து நிற்கிறது!

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா?

அடையாளம் காண்பீர்!

No comments:

Post a Comment