எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் - உச்சநீதிமன்றத்தில் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி, மார்ச் 25 ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச் சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் எம்.பி., பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலை யில், சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதும் தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு 8(3)- அய் சட்ட விரோத மானது என அறிவிக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செயப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment