Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சமூகப்பணித்துறை மற்றும் செட் இன்டியா சமூக சேவை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
March 18, 2023 • Viduthalai

வல்லம்.  தஞ். 18 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை தஞ்சாவூரில் இயங்கி வரும் செட் இன்டியா தொண்டு நிறுவனத்துடன் பல்வேறு சமூக வளர்ச்சி வளர்ச்சி சமூக நல்வாழ்வு சார்ந்த பணிகளையும், திட்டங்களையும், ஆய்வுகளையும் இணைத்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொழுத்திடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி: சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும், தேவைகளையும் அறிந்தும் ஆய்வின் அடிப்படையிலும் திட்டங்கள் வடிவமைத்து செயல்பட ஆலோசனை வழங்கினார். 

இதனை தொடர்ந்து செட் இன்டியா நிர்வாக இயக்குநர்

பெ.பாத்திமாராஜ் தனது உரை யில்: கடந்த 24 ஆண்டுகளாக தங்கள் நிறுவனம் நமது மண்ணின் கலை மற்றும் கலாச்சார வளர்ச்சி யோடு பெண்கள் மற்றும் குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருவதாக கூறினார். 

2009 ஆண்டு முதலே பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூக பணி மாணவர்களுக்கு களப்பணி பயிற்சி அளித்து வருவதாகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மேலும் பல்வேறு பயிற்சிகள், கருத்து பட்டறைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள வழி வகுக்கும் என்றார். முன்னதாக பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனைவர் ஆனந்த் ஜெரார்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சமூகப்பணி மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலு சாமி மற்றும் பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா, கல்வி புல முதன் மையர் அ.ஜார்ஜ், அறிவியல் மேம் பாடு மற்றும் ஆராய்ச்சி வெளியீட் டிற்கான பயிற்சி மய்ய இயக்குநர் பி.பாலகுமார், ஆராய்ச்சி புல முதன்மையர், முனைவர் குமரன் மனித நேய அறிவியல் மற்றும் மேலாண்மை புல முதன்மையர் பி.விஜயலெட்சுமி செட் இன்டியா நிருவாக இயக்குநர்,  பொ.பாத் திமாராஜ், செந்தில்குமார் அறங் காவலர், திட்ட இயக்குநர்   ப.எடில்பர்ட், உயிரி தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி புல முதன்மையர் குமரன்  ஆகியோர் கலந்து கொண் டனர். 

உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார். 


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn