இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சலால் இணை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்: எச்சரிக்கும் அய்.சி.எம்.ஆர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சலால் இணை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்: எச்சரிக்கும் அய்.சி.எம்.ஆர்.

புதுடில்லி, மார்ச் 10- இந்தியாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், யார், யாரையெல்லாம் அதிகம் இந்த வைரஸ் தாக்கும் என்று இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங் களாக இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ்  (Influenza H3N2) பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று இதன் பாதிப்புகள் இருக்க லாம். சில நேரங்களில் பாதிப்பு தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சலாகத் தொடங்கி தீவிர காய்ச்சலாக பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போது இன் ஃப்ளுயன்சா எச்3என்2 (Influenza A subtype H3N2  என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஹெச்3என்2 வைரஸ் அறிகுறிகள் தென்பட் டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். உடல் நலம் குன்றியோர், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு தீவிரத்துடன் கூடிய ஹெச்3என்2 வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள் ளது. தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை கூறியுள்ளது. அத்துடன் மாவட்டங்களில் அதிக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத் தலையும் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment