Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பாசிச ஆட்சியை வீழ்த்தும் ஒரே வழி!
March 14, 2023 • Viduthalai

திரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் ஆணவ வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து சி.பி.எம். சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜ.க.  பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் 44  தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, இம்முறை 33 தொகுதிகளில் தான்  வெற்றிபெற முடிந்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கை முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பாஜகவினர் - மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதலை தொடுத்தார்கள். கட்சிகளின் ஊழியர்களை மட்டுமல்ல, மேற்கண்ட கட்சிகளை ஆதரித்த வாக்காளர்களையும் குறி வைத்து தாக்கினார்கள். இப்போதும், இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களின்  வீடுகள், கடைகள், கட்சி அலுவலகங்கள் குறி  வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 3 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவினர் தொடுத்து வரும் தாக்குதலுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த செயல் வீரர்களின் ரப்பர் தோட்டங்கள், அறுவடைக்கு தயாராகி யுள்ள பயிர்கள் போன்ற வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கி வருகிறார்கள். ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் வாகனங் களை அழிப்பதன் மூலம் அன்றாட வருவாயை அழிக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் இத்தகைய முறையில்தான் வன்முறைகள் தொடர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த 25 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.  இத்தகைய வன்முறைக்குப் பிறகும் இடதுசாரிகள் - காங்கிரஸ் கட்சியினர் 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்களே என்ற ஆத்திரத்தில் தான் எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக முற்பட்டுள்ளது. மேற்கண்ட கொலைவெறித் தாக்குதல்கள் ஆளும் பாஜகவின் திட்டமிட்ட வன்முறை  தான். கொலை வெறி, வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்திடவும், வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்திரி ஆளுநரை  சந்திக்க நேரம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.  ஆளுநரின் அணுகுமுறைக்கு பின்னணி உள்ளது. மாநில முதலமைச்சர் வன்முறை நடந்த சில இடங்களை பார்வையிட்டபின் எதிர்க்கட்சிகள் தான் வன்முறையில் ஈடுபடுகின்றன என பொய்யான அறிக்கையை விட்டுள்ளார். 

 திரிபுராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக ஆய்வு நடத்தச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தேர்தலுக்குப் பின்பு இங்கு வன்முறை வெடித்தது. குறிப்பாக சேபாஹிஜலா மற்றும் கோவாய் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறை குறித்து இடதுசாரி, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

 நேஹல்சந்திராநகரில் ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற குழு மீது பாஜகவினரும் ஹிந்துத்துவ அமைப்பினரும் தாக்குதல் நடத்தினர். 'பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கத்துடன்  தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அங்கு இருந்த ஒரு வாகனம் கடும் சேதமடைந்தது. மேலும் இரண்டு கார்கள் சூறையாடப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் காயமடையவில்லையென்றாலும் அவர் களது வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.  

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக குழுவில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமாரம் கரீம் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திரிபுராவில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வன்முறைகளை தீவிரமாக கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை நாட்டு மக்களுக்கும் தெரிவிப்பதற்காக நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம். மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு அவர்களது வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஓர் ஆட்சி ஒன்றியத்தில் இருப்பதால் இந்த அராஜகம்.

இந்த நிலையைக் கண்டித்து நேற்று சென்னையில் மாநில சிபிஎம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தியது.

தமிழ்நாட்டைப் போல வேறு மாநிலங்களிலும் இது போன்று மக்கள் சக்தியைத் திரட்டி ஒன்றிய பாசிச ஆட்சியை வீழ்த்திட முனைய வேண்டும். குறிப்பாக தேசிய கட்சிகள் இதனை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். 


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn