கருநாடகத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரின் திமிர்ப்பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

கருநாடகத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரின் திமிர்ப்பேச்சு

பெங்களூரு, மார்ச் 16- கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா, ‘அல்லா-வை காது கேளாதவரா?’ எனக் கேட்டு அவமதித்த சம்பவம் நடந்து உள்ளது. 

கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘விஜய் சங்கல்ப நடைப்பயணம்’ என்ற பிரச்சார இயக்கத்தை பாஜக நடத்தி வருகிறது. இந்த பிரச்சாரத் தில் பங்கேற்று ஈஸ்வரப்பா பேசியபோது, ‘​​ஆஸான்’ எனப்படும் தொழுகைக்கான இஸ்லாமிய அழைப்பு அருகிலுள்ள மசூதியி லிருந்து ஒலித்தது. அதைக் கேட்ட  ஷிவமோகா சட்டமன்ற உறுப்பினர் ஈஸ் வரப்பா, எங்கு சென்றாலும் ‘ஆஸான்’ தலைவலியாக உள்ளது என்று கூறியதுடன், “உச்ச நீதிமன்ற நீதிபதி இருக்கிறார். இன்றோ நாளையோ, இது (மைக்குகளில் ஆஸானை அழைக்கும் வழக்கம்) நிச்சயமாக முடிவுக்கு வரும்” என்றார். இதனைக் கேட்டு பாஜக-வினர் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். 

தொடர்ந்து பேசிய ஈஸ்வரப்பா, “நாங்களும் கோவில்களில் பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் சுலோகங்களை உச்சரிக்கிறோம், பெண்கள் பஜனைப் பாடுகிறார்கள். ஆனால் அவர்கள் (இஸ்லாமியர்கள்) மைக் மூலம் சத்தமாக கத்துகிறார்கள் என்றால், அவர் (அல்லா) காது கேளாதவர் என்றுதான் சொல்ல  வேண்டும். ஆஸான் தேவையில்லை. எனவே, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண் டும் என நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

வாய்க்கொழுப்பான பேச்சுக்கு பெயர் போன வரான இதே ஈஸ்வரப்பா தான், முன்பொருமுறை, “இந்தியா வின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடிக்குப் பதிலாக ஒருநாள் காவி கொடி பறக்கும்” என்று குறிப்பிட்டவர் ஆவார். ரூ. 4 கோடி மதிப்பிலான அரசு காண்ட்ராக்டில் பில் தொகை வந்துசேர வேண்டுமானால், தனக்கு 40 சதவிகித கமிஷன் வேண்டும் என்று ஈஸ்வரப்பா கேட்டதாக சந்தோஷ் பாட்டீல் என்ற காண்ட்ராக்டர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியை இழந்தவர் ஈஸ்வரப்பா என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment