திராவிட மாடல் அரசைப் பின்பற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

திராவிட மாடல் அரசைப் பின்பற்றி

அரசுப் பேருந்துகளில் புதுச்சேரி,மார்ச்19- புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய திட்டம் கொண்டு வரப் படும் என்றும், கணவரை இழந்த இளம் பெண்களின் உதவித் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பி னர்கள் பேசி முடித்த பின்னர் முதலமைச்சர் ரங்கசாமி பதில ளித்து பேசியதாவது:-

தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக் கான சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிடுவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். சமூக நலத்திட்டங்கள் உட்பட அனைத்துத் துறைகளுக்கும் இந்தாண்டு கூடுதலாக நிதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு எரிவாயு உருளை மானியம் வழங்கும் திட்டம், பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000 வைப்புத் தொகையாக உடனடியாக வங்கி களில் செலுத்தும் திட்டம் உள் ளிட்ட சமுதாயத்துக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை எல்லாம் அறிவித்து அவற்றை சரியாக செயல்படுத்துவோம் என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்பு கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைபடி, கணவரை இழந்த இளம் பெண்களுக்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் படும். அனைத்து பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய திட்டம் கொண்டு வரப்படும்.

காரைக்காலில் திடீர் மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும். உற்பத்தி மானிய மான எக்டேர் ஒன்றுக்கு ரூ.12,500 உடன் சேர்த்து ரூ.20 ஆயிரமாக கிடைக்கும். இதற்காக 4,119.50 எக்டேர் கணக்கிடப் பட்டு, 5,137 விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

மஞ்சள் நிற குடும்ப அட்டை தாரர்கள் உட்பட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத் தப்படும்.

நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பிற அறுவை சிகிச்சை உள்ளிட்ட வைகளுக்கு ரூ.5 லட்சத்துக்குமேல் செல்லும் போது அதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் சான்றிதழ்படி முதலமைச்சர் ஒப்பு தலோடு மருத்துவ செலவு திரும்ப வழங்கப்படும்.

இதற்காக ஆண்டுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்படும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பயணம் புதுச்சேரி சட்டமன்றத்தில் அறிவிப்பு

No comments:

Post a Comment