ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையருடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையருடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு

புதுடில்லி, மார்ச் 17- ஜம்மு--காஷ்மீர் யூனியன் பிர தேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக் களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா தலை மையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை 16.3.2023 அன்று சந்தித் தனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத் தின் பிரிவு-370 கடந்த 2019-இல் நீக்கப்பட்டதையடுத்து, ஜம்மு--காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றில் சட்டப் பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் இருக்கும் என அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் மேனாள் முத லமைச்சரும் நாடாளு மன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரைச் சந்தித்து, ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம்யெச்சூரி, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கையெ ழுத்திட்ட அறிக்கை ஒன்றையும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அவர்கள் வழங்கினர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதா வது: சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதில் காலதாமதம், ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப் படை மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுப்ப தோடு, அரசமைப்புச் சட்டத்தை மீறுவதுமாகும்.

இது குறித்து விவா திக்கும்போது, பஞ்சாயத்து அமைப்புகள் செயல்படுவதால், பேர வைத் தேர்தலை நடத்தும் தேவை இல்லையென்ற வாதம் முன்வைக்கப்படு கிறது. பஞ்சாயத்து உள் ளிட்ட அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத் தப்படுவது, ஒருபோதும் சட்டப்பேரவை தேர்த லுக்கு மாற்றாக அமையாது.

சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச் சர் உள்ளிட்டோர் பல முறை தெரிவித்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையம்தான் தனது இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்க ளைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்கள் கோரிக்கை களைக் கேட்டறிந்த தலைமைத் தேர்தல் ஆணையர், விரைவில் இது குறித்தான கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார். ஜம்மு-காஷ் மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக அரசு கூறுகிறது. தற்போது, சட் டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையத்திடமே உள்ளது’ என்றார் அவர்.

No comments:

Post a Comment