உள்நோயாளியாக சேரவில்லையென்றாலும் மருத்துவக் காப்பீடு தொகை பெறலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

உள்நோயாளியாக சேரவில்லையென்றாலும் மருத்துவக் காப்பீடு தொகை பெறலாம்

நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

வதோதரா, மார்ச் 21- 'மருத்துவமனையில் உள்நோயாளி அனுமதிக்கப்படவில்லை என்றா லும், மருத்துவ காப்பீட் டுத் தொகை வழங்க வேண்டும்' என, வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த, ரமேஷ்சந்திர ஜோஷி என்பவர், 2016 நவ., 25இல் உடல்நிலை சரியில்லாததால், அகமதா பாதில் உள்ள மருத்துவ மனையில், தன் மனை வியை அனுமதித்தார்.

அடுத்த நாளே அவர் குணமடைந்தார். இந்த சிகிச்சைக்கு, 44 ஆயிரத்து 468 ரூபாயை ரமேஷ் சந்திர ஜோஷி செலவு செய்தார். சிகிச்சைக்கு செலவான தொகையை தரும்படி, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத் திடம் ரமேஷ்சந்திர ஜோஷி விண்ணப் பித்தார்.

இதை பரிசீலித்த காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனையில் சிகிச்சைக்காக நோயாளி 24 மணி நேரம் தங்க வைக்கப்படவில்லை எனக் கூறி, காப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என, தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ரமேஷ்சந்திர ஜோஷி, காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக, வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஆணை யம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மருத்துவமனையில், 24 மணி நேரத்திற்கு குறை வாக நோயாளி அனுமதிக் கப்பட்டு இருந்தாலும், அனுமதிக்கப்பட வில்லை என்றாலும் காப் பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

தொழில் நுட்பம் மிக வும் வளர்ச்சி அடைந்த இந்த காலத் தில், 24 மணி நேரத்துக்குள் நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்று விடுவர்.

இதை எல்லாம் கார ணம் காட்டி காப்பீட்டுத் தொகையை வழங்க மறுக்கக் கூடாது. இவ்வாறு தீர்ப்பு அளித்தது.

No comments:

Post a Comment