வழிப்பறி, வீடு புகுந்து தொடர் திருட்டு பா.ஜ.க. செயலாளர் சிறையிலடைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

வழிப்பறி, வீடு புகுந்து தொடர் திருட்டு பா.ஜ.க. செயலாளர் சிறையிலடைப்பு

 

திருக்கோவிலூர், மார்ச் 18- கள்ளக் குறிச்சி மாவட்டம் திருக்கோவி லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தொடர் வழிப்பறி கொள்ளை மற்றும் பல்வேறு திருட்டுகள் நடந்ததால் காவல் துறை ஆய்வாளர் பாபு தலை மையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் 14.3.2023 அன்று இரவு ஈடுபட்டனர். 

அப்போது இரு சக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி வந்த நபர், காவல்துறையினரைக் கண்டதும் வாகனத்தை வேகமாக திருப்பி வந்த வழியே மீண்டும் சென்றார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த நபரை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த நெல்லிக்குப்பம் நகர பாஜக செயலாளர் அறிவழகன் (வயது 41). என்பதும், திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அறிவழகன் மீது கடலூர், பண்ருட்டி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, செயின் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு, பைக் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் சிறை சென்று வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், நான்கு சவரன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment