ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் திமுக எம்பிக்கள் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் திமுக எம்பிக்கள் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

புதுடில்லி,மார்ச்14- ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து மக்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி. ரவீந்தர்நாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர். பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் உள்ளதா என்றும் அவர் வினவி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல்துறைக்கு வழங்கி உள்ளதாகவும் அருகாட்சியகத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணிகள் மிக வேகமாக முடிக்கக் கூடிய நிலையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு விலைமதிப்பற்ற கல்வெட்டுகளை ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சிகம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக எழுத்துப்பூர்வமான பதிலில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment