அறிவுக்கும், துணிவுக்கும் முன்னால் சனாதனம் சரிந்தது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

அறிவுக்கும், துணிவுக்கும் முன்னால் சனாதனம் சரிந்தது!

1. தாய் இறந்த நிலையிலும் மகளுக்கு நடந்த திருமணம்: உதவிக்கரம் நீட்டிய உறவினர்கள் (27.03.2023)

நாகர்கோவில் அருகே கீழப்பெருவிளை அய்யா கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். 

 இவருக்கு திருமணம் நிச்சயித்த நிலையில் பெண்ணின் தாயார் மின்சாரம் தாக்கி மரண மடைந்தார். திருமணத்திற்கு முதல் நாள் தாயார் மரணமடைந்த நிலையில் பலர் 3 மாதம் எந்த நல்ல காரியத்தையும் செய்யவேண்டாம் என்று கூறிய நிலையில், அம்மா இறந்து திருமணத்தை நிறுத்திவிட்டார் என்ற அவப்பெயர் இறந்துபோன தனது தாய்க்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தாயார் இறந்த மறுநாளே எளிய முறையில் அந்தப் பெண் தனது திருமணத்தை நடத்திக் காட்டினார். 

2. கள்ளக்குறிச்சி அருகே உடல் நலக் குறைவால் இறந்த தந்தையின் உடலுக்கு முன்பாக தாலிகட்டிய மணமகன் (21.03.2023)

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன். பி.காம் பட்டதாரியான இவர் தொண்டு நிறுவனம் ஒன்றை சொந்தமாக செயல்படுத்தி வருகிறார். இவருக்கும், இவரோடு படித்த பெண்ணிற்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பிரவீனின் தந்தை ராஜேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 27.03.2023 அன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், தந்தையின் உடலைப் புதைப்பதற்கு முன்பு அவரது பிணத்திற்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்கிறேன் - என்று பிரவீன் கூறினார். இதற்குப் பெண் வீட்டாரும், குடும்பத்தினரும் மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்த நிலையில் தந்தையின் உடலுக்கு முன்பாகவே  மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

 துக்க நிகழ்வு நடந்துவிட்டால் - "இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்துவிட்டான்"  - என்ற சொல்லாடல் இருக்கும் நிலையில், படித்த இரண்டு பேரும் - இறப்பு ஒரு துயர நிகழ்வுதான், இருப்பினும் இறந்த பிறகு மங்கல நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்ற சாஸ்திர விதிகளை தூக்கி எறிந்து  விட்டு திருமணம் செய்து கொண்ட தானது. ஒரே வாரத்தில் வட தமிழ்நாட்டிலும் (கள்ளக்குறிச்சி), தென் தமிழ்நாட்டிலும்  (நாகர் கோவில்) நடந்துள்ளது.

கேட்பதற்கும், படிப்பதற்கும் அதிர்ச் சியாக இருக்கலாம். ஆனால் திருமணத் துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில்,  ஒரு மரணத்தை முன்னிறுத்தி, திருமணத்தை நிறுத்துவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று நினைத்தது ஆச்சரியமானதும், வரவேற்கத்தக்கது மாகும். இதில் இரு வீட்டார்களின் ஒத்துழைப்பு உன்னதமானது.

எதிலும் சாஸ்திரம், சடங்கு, சனாதனம், நம்பிக்கை, அபசகுனம் என்ற விலங்குகளால் பூட்டப்பட்ட மனித சமூக மூளை, கொஞ்சம் விழிக்க ஆரம்பித்து விட்டது என் பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

புத்திசாலித்தனம் மட்டுமல்ல; துணிவும் பாராட்டத்தக்கது. உற்றார் உறவினர்களும் ஒத்துழைத்தது வரவேற்கத்தகுந்ததே!

அறிவும், துணிவும் மிக்க இத்தகு செயற்பாடுகளை - தந்தைபெரியார் பிறந்த தமிழ் மண்ணைத் தவிர, வேறு எங்கும் எதிர்பார்க்க முடியுமா?


No comments:

Post a Comment