குஜராத் - பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் பிஜேபி எம்.பி., எம்.எல்.ஏக்களுடன் குலாவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

குஜராத் - பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் பிஜேபி எம்.பி., எம்.எல்.ஏக்களுடன் குலாவல்!

புதுடில்லி, மார்ச் 29- பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வன்கொடுமைக்  குற்றவாளியான சைலேஷ் சிம்மன் லால் பாட், குஜராத் அரசு விழாவில், அம்மாநில நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஒருசேர மேடையில் கலந்து கொண்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜ ராத்  மாநிலத்தில் நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு  சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டி விடப் பட்டது. அப்போது அகமதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த  பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலை யில், அவரையும், அவரது தாயார் உள்ளிட்ட மேலும் 4 பெண்களையும் 2002 மார்ச் 3 அன்று கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது.  மேலும், பானுவின் 3 வயது பெண் குழந்தை சலேஹாவை பாறையில் அடித்துக் கொன்ற அந்தக் கும்பல், மொத்தமாக 7 பேரை கொன்று குவித்தது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, பில்கிஸ் பானு நடத் திய நீண்ட நெடிய சட்டப் போராட் டம் காரணமாக, 2008-ஆம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்ற வாளிகள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனிடையே குற்றவாளிகள் 11 பேரையும், 2022 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர  தின பவளவிழாவை முன் னிட்டு குஜராத்  பாஜக அரசு சிறை யில் இருந்து விடுதலை செய்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.  இவர் களை விடுவிப்பதற்கான அரசு குழு வில் இடம்பெற்றவரும், கோத்ரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப் பினருமான சி.கே. ரவுல்ஜி, “11 பேரும் ஏதாவது குற்றம் செய் தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் குற் றம் செய்யும் எண்ணம் அவர்களி டத்தில் இல்லை. மேலும் அவர்கள் பிராமணர்கள். 'பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம்' (நல்ல நெறி முறைகள் கொண்டவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள்) கொண்ட வர்கள் என்று அறியப்படுகிறார்கள். அப்படிப் பட்டவர்களை எதோ மூலையில் வைத்து தண்டிப்பது யாரோ ஒருவரின் தவறான நோக் கமாக இருக்கலாம். எனினும், சிறை யில் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது” என்று தெரிவித்தார். தற்போது 11 பேரின் விடுதலைக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில்தான், பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியான சைலேஷ் சிம்மன்லால் பாட், குஜ ராத் அரசு விழா ஒன்றில், அம்மாநில நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்களுடன் ஒன்றாக மேடையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment