தேசிய தகவலியல் மய்யத்திடம் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

தேசிய தகவலியல் மய்யத்திடம் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி

சென்னை, மார்ச் 7- தமிழ் நாடு முழுவதும் குடும்ப அட்டைகள் தயாரிக்கும் பணிகள், தனியாரிடமி ருந்து ஒன்றிய அரசின் நிறுவனமான தேசிய தகவலியல் மய்யத்திடம் அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சத்துக் கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த அட்டை கள் மூலம் மாநிலத்தில் 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 958-க்கும் அதிக மான பொதுமக்கள் பயன்பெறுகிறார்கள். குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டு வழங்கப்பட்டு வரு கின்றன.

இணையதள வசதி

புதிய குடும்ப அட் டைகளுக்கு விண்ணப்பிக் கவோ, அட்டைகளில் திருத்தங்களைச் செய் யவோ உணவுத் துறை சார்பில் தனி இணைய தளம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு பயன் பாட்டில் உள்ளது. இந்த இணையதளம் மூலமாக நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வது, நகல் மின் னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை யைத் தெரிந்து கொள்வது ஆகியன பணிகளையும் மேற்கொள்ளலாம்.

பராமரிக்கும் பணி

இணையதளத்தின் வழியே புதிய குடும்ப அட்டைக்கோ, அட் டையில் திருத்தங்களைச் செய்யக் கோரினாலோ அது சம்பந்தப்பட்ட உண வுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிக்கு இணைய தளத்தின் வழியாகவே சென்றடையும். அவர் உரிய ஆய்வுகளுக்குப் பிறகு புதிய குடும்ப அட்டைக்கோ அல்லது திருத்தம் கோரியோ பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப் பத்துக்கு ஒப்புதல் அளிப் பார். இந்தப் பணிகளில் எந்தத் தொய்வும் இல்லா மல் பொதுமக்களுக்கும், உணவுப் பொருள் வழங் கல் துறை அதிகாரிக்கும் இடையே பாலமாக இருந்து அந்தத் துறையின் இணையதளத்தை பராமரிக்கும் பணியை தனியார் மென்பொருள் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

உணவுப் பொருள் வழங்கல் துறைக்கென தனியாக இணையதளம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தனியார் நிறுவனம்தான் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்தது. இந்த நிலையில், ஒன்றிய அர சுத் துறையின் கீழ் செயல் படக் கூடிய தேசிய தகவலியல் மய்யத்திடம் உணவுப் பொருள் வழங் கல் துறையின் இணைய தள பராமரிப்புப் பணிக ளும், மின்னணு குடும்ப அட்டை அச்சிடுதல் உள் ளிட்ட பணிகளும் வழங் கப்படவுள்ளன.

இதற்கான பூர்வாங்க பணிகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் உள்ள பல கோடி குடும்ப அட்டைதாரர்களின் தனிப் பட்ட தகவல்கள், விவரங் களை ஒன்றிய அரசுத் துறை நிறுவனமான தேசிய தகவலியல் மய்யம் பராமரிக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment