பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்னணுவியல் - தொடர்பியல் பன்னாட்டு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்னணுவியல் - தொடர்பியல் பன்னாட்டு கருத்தரங்கம்

வல்லம், மார்ச் 19- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்  துறையின் சார்பாக   மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் பன்னாட்டுக் கருத் தரங்கம் நடைபெற்றது.

பல்கலை கழகத்தின் துணை வேந்தர் முனைவர்  வேலுச்சாமி , பதிவாளர் முனைவர்.பி.கே. சிறீ வித்யா ஆகியோர் தலைமை உரை வழங்கினர் மற்றும் முதன்மையர் கள் முனைவர் ஏ ஜார்ஜ்,  முனைவர் பாலகுமார், முனைவர்.குமரன் கலந்துகொண்டு முன்னிலை வகித் தனர் . சுதர்சன்  பொறியியல் கல்லூரியின்  முதல்வர் முனைவர் கே. சிறீனிவாசன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றி னார். 

அமெரிக்காவில் உள்ள நெப் ராஸ்கா லிங்கன் பல்கலைகழகப் பேராசிரியர்  முனைவர்  யங்பெங்லூ மற்றும்   பஞ்சாப் மாநிலத்தின் லவ்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சுமன்லதா ஆகியோர் இணையம் வழியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக் கருத்தரங்கில் 25 கல்லூரிகள் மற்றும் பல்கலையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று பயன் அடைந்தனர்.  துறைத் தலைவர் முனைவர் ச.நர்மதா மற்றும் முனைவர், வய லெட் ஜூலி, முனைவர் ஜனனி , முனைவர் ராஜநந்தினி ஆகியோர் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடு களை  செய்து இருந்தனர்.

டாக்டர்.சிறீவித்யா  சிறப்பு விருந்தினர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

No comments:

Post a Comment