வசந்த காலத்தில் வரும் நோய்த் தொற்று!... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

வசந்த காலத்தில் வரும் நோய்த் தொற்று!...

 தற்போது வேகமாக பரவி வரும் 'எச்3என்2' இன்புளூயன்சா தொற்று, கடந்த 2009இல் ஏற்பட்ட எச்1என்1 தொற்று போன்று தீவிரமானது அல்ல என்பது சற்றே ஆறுதலான விஷயம். பின் பனி காலம் முடிந்து, வசந்த காலம் துவங்குவ தற்கு முன், உடலில் கபம் சேர்ந்து இருக்கும். அது வெயில் பட்டு மெல்ல இளகி, குளிர் காய்ச்சல், தும்மல், மூச்சுப் பிரச்னை, இருமல், கண்களில் நீர் வடிதல், தலைவலி என்று வெளிப்படும்.

எச்3என்2 வைரசின் அறிகுறிகளாக இருமல், ஜுரம், உடல்வலி, குமட்டல், வாந்தி, பேதி போன்றவை ஏற்படுகிறது. கரோனாவிற்கான சிகிச்சை, வழிமுறைகளே இதற்கும் போதுமானது.

நுரையீரலை பலப்படுத்தும் சித்தரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, பட்டை, கிராம்பு, துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, வில்வம், வேப்பிலை, மஞ்சள் இவையெல்லாம் கபத்தை குறைக்க வல்லவை. இவற்றில் ஒன்றையோ, இரண் டையோ, மருத்துவரின் ஆலோசனைப்படி, கஷாயம் வைத்து, 21 நாட்கள், தேவைப்பட்டால் 42 நாட்கள் தினமும் இரவு படுக்கும் வேளையில், அரை கிளாஸ் சர்க்கரை சேராத சூடான பசும் பாலில் கலந்து குடித்து வர நுரையீரல் பலம் பெறும்.

தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் போது, நீர்க் கோவை மாத்திரையை போட்டுக் கொள் ளலாம். ராசனாதி சூரணத்தை வெதுவெதுப்பாக நெற்றியிலும், மூக்கைச் சுற்றியும் பற்றுப் போட்டுக் கொண்டால், 'கடகட'வென சைனசில் கட்டிக் கொண்ட கபம் வற்றிப் போகும். காய்ச்சல் இருந்தால் கஞ்சி, காய்கறி சூப், ரச சாதம், சுட்ட அரிசி அப்பளம், கறிவேப்பிலை துவையல், வேகவைத்த நேந்திரம் பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை என 5 - 7 நாட்கள் குறைந்த அளவு சாப்பிட்டால் விரைவில் உடல் நலன் பெற முடியும்.

வாந்தி இருந்தால் நெல் பொரி கஞ்சி மாத்திரம் சாப்பிட்டால் போதுமானது. வயிற்றுப் போக்கு இருந்தால் மோரில் ஒரு பங்கு நீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து, காய்ச்சி, அது திரிந்த வுடன் வடிகட்டி, அந்த நீரை கால் டம்ளர் சாதத் துடன் பிசைந்து தரலாம். ஜாதிக்காயை கால் ஸ்பூன் தேனுடன் குழைத்து, இருவேளை மருத் துவரின் அறிவுரையுடன் குடிக்கலாம்.

No comments:

Post a Comment