பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பெரியார் சமுதாய வானொலி (90.4) இணைந்து நடத்தும் பன்னாட்டு காடுகள் தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பெரியார் சமுதாய வானொலி (90.4) இணைந்து நடத்தும் பன்னாட்டு காடுகள் தினம்

வல்லம், மார்ச் 24- - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்)  தஞ்சை மாவட்ட வனத் துறை மற்றும் பெரியார் சமுதாய வானொலி (90.4) இணைந்து நடத்தும் பன்னாட்டு காடுகள் தினம் 21.03.2023 அன்று நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பிள்ளையார் பட்டி வனத்துறை அலுவலர் கிருஷ்ணசாமி வரவேற்புரை வழங் கினார். பல்கலைக்கழகத்தின் பதி வாளர் பேராசிரியர் பி.கே.சிறீ வித்யா தலைமை உரை ஆற்றினார். 

இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் தம்பி கலந்து கொண்டு தலைமை உரையினை வழங்கினர்.  மேலும் சமூக ஆர்வலர் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் இயக்க ஒருங் கிணைப்பாளர் முனைவர் பா.ராம்மனோகரின்  ""இந்திய வன விலங்கு பாதுகாப்பபும் மேலாண் மையும்"" என்ற நூலினை வெளி யிட்டுச் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து முனைவர் ராம் மனோகர் விழிப்புணர்வு நிகழ்த்தினார். 

வீரமணி மோகனா வாழ்வியல் ஆய்வு மய்ய இயக்குநர் மற்றும் தஞ்சை மாவட்ட பசுமை சுற்றுச் சூழல் இயக்க உறுப்பினர் பேரா அ.அசோக்குமார் "வளமான காடும் நலமான மக்களும்"" என்ற தலைப்பில் உரையாற்றினார். நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவ மாண விகள் பங்குபெற்றனர். 

இந்நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் இயக்குநர் மருத்துவர் இராதிகா மைக்கேல் மற்றும் மேனாள் மாவட்ட வன அலுலவர் முனைவர் மா.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு விழா வினை சிறப்பித்தனர். 

இறுதியாக ஆஸ்கார் விரு தினை வென்ற "எலிபென்ட் விஸ் பரஸ்"" என்ற குறும்படம் திரையிடப்பட்டது. வனத்துறை அலு வலர் இளஞ்செழியன் இணைப் புரை வழங்கி விழாவினை ஒருங் கிணைத்தார்.  மற்றும் பெரியார் சமுதாய வானொலி நிலையத்தின் இயக்குநர் முனைவர் ச.நர்மதா நன்றியுரை ஆற்றினார். 

இந்நிகழ்வில் வனத்துறை அலு வலர்களும் பல்கலைக்கழகக்கழக துறைத்தலைவர்கள், இயக்குநர் கள், பேரசிரியர்கள், பணியாளர்கள் மாணவ, மாணவிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment