தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததால் ரூ.6 லட்சம் அபராதமா? இளைஞரை மொட்டையடித்து ஊர்வலமாக கொண்டு செல்லும் இழிவு! காவல்துறையினர் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததால் ரூ.6 லட்சம் அபராதமா? இளைஞரை மொட்டையடித்து ஊர்வலமாக கொண்டு செல்லும் இழிவு! காவல்துறையினர் விசாரணை

கொள்ளேகால், மார்ச் 7- பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் ஜாதி மறுப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் அவலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

மணம்புரிந்து கொண்ட அப்பெண் துணிச்சலுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதல் திருமணம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா குங்கள்ளி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஜாதியைச் சேர்ந்த கோவிந்தராஜு என்பவரின் மகன் வெங்கடேசுக்கும் காதல் மலர்ந் தது. இதையடுத்து இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் வெளியூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வெங்கடேசனின் பெற்றோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை பார்ப்பதற்காகவும், கவனித்துக் கொள்வதற்காகவும் வெங்கடேஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னு டைய சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது அவரது ஜாதியைச் சேர்ந்தவர்கள், 'நீ தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறோம், நீ இங்கு வந்தது எங்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது, அதனால் நீ இங்கு வந்ததற்கும், உன்னுடைய பெற்றோரை சந்தித்து பேசுவதற்கும் ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேசும், அவரது மனைவியும் செய்வதறியாது நின்ற னர். அப்போது அவர்களை வெங் கடேஷ், ஊர் மக்களின் எதிர்ப்பை யும் மீறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மேலும் ரூ.6 லட்சம் அபராதம் செலுத்துவதாக ஒப்புக் கொண்ட அவர், அந்த தொகையை ஊர் முக்கியஸ்தர்களிடம் செலுத் தினார். ஆனால் அதையும் ஏற்றுக் கொள்ளாத ஊர் முக்கியஸ்தர்கள், தாழ்த்தப்பட்ட பெண்ணை திரும ணம் செய்து கொண்டதற்காக வெங்கடேசுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து வர வேண்டும் என்று கூறினர். அதை ஏற்றுக்கொண்ட வெங்க டேசும், மொட்டை அடித்து ஊர்வலமாக வர தயாரானார். ஆனால், இந்த நிகழ்வால் பாதிக்கப் பட்ட வெங்கடேசின் மனைவியான தாழ்த்தப்பட்ட பெண் இதுபற்றி கொள்ளேகால் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் இதுபற்றி வழக்குப்பதிவு செய் துள்ள காவல்துறையினர் 15 பேரிடம் விசாரித்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment