5ஆவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் : எதிர்க்கட்சிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

5ஆவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் : எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடில்லி, மார்ச் 18  ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றம் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது. நாடாளு மன்ற நிதி நிலை கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அதானி குழும முறை கேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என லண் டனில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சியினர் பதில் முழக்கமிட்டனர் இதே முழக்கம் நாடாளுமன்றத்தில் 5ஆ-வது நாளாக நேற்றும் எதிரொலித்தது. மக்களவை நேற்று காலை தொடங்கியதும், காங் கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மய்யப் பகுதிக்கு சென்று அதானி குழுமம் முறைகேடு குறித்து நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என முழக்கமிட்டனர் ராகுல் காந்தியை அவையில் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினர்.பதிலுக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்தியாவை அவமானப்படுத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர் இந்த அமளி 20 நிமிடங்கள் தொடர்ந்தது. அவையை சுமுகமாக நடத்த அனுமதிக்க வேண் டும் என உறுப்பினர்களுக்கு மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா வேண்டு கோள் விடுத்தார். ‘‘அமளியில் ஈடுபடுவ தற்காக, மக்கள் உங்களை இங்கு அனுப்பவில்லை. அனைவரும் பேச வாய்ப்பு அளிக்கிறேன். அவையை சுமுகமாக நடத்த உதவுங்கள்’’ என்றார்.

அவரது வேண்டுகோளை உறுப் பினர்கள் கண்டுகொள்ளாததால், அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாகவும், மக்களவை மீண்டும் நாளை மறுநாள் கூடும் எனவும் அறிவித்தார். அப்போது அவையில் காங் கிரஸ் உறுப்பினர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இதர அமைச்சர்கள் இருந்தனர். 

மாநிலங்களவை

இதேபோல, மாநிலங்களவை நேற்று காலை கூடியபோது, அதானி குழும முறைகேடு குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு தாக்கீது கொடுத்தனர். இதை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவையின் மய்யப் பகுதிக்குசென்று, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், திமுக உறுப்பினர்களும் இருக்கையை விட்டு எழுந்து நின்று குரல் கொடுத்தனர். பதிலுக்கு, ராகுல்மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும்கட்சி உறுப்பி னர்கள் முழக்கம் எழுப்பினர். இந்த அமளியால் மாநிலங்களவையும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் கோடி கடந்த மாதம் 9ஆ-ம் தேதி மாநிலங்கள வையில் பேசினார். அப்போது ‘‘நாட் டில் 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங் களுக்கு நேரு - காந்திகுடும்பத்தினரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நேரு குடும்பத்தினர் யாரும் தங்களது பெயர்களில் நேருவை ஏன் சேர்க்கவில்லை என்பதுதான் புரிய வில்லை. இதிலென்ன வெட்கம் அவர்களுக்கு?’’ என்றார். 

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல்....

இதனால் பிரதமர் மோடிக்கு எதி ராக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப் பினருமான வேணுகோபால், அவைத் தலைவரிடம் உரிமை மீறல் தாக்கீது கொடுத்துள்ளார். ‘காங்கிரஸ் தலை வர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்குஎதிராக, பிரதமர் மோடி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த கருத்து மக்களவை உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை கேலி செய்வது போன்றும், புண்படுத்துவது போன்றும், அவமதிக்கும் வகையிலும் உள்ளது. அதனால், மாநிலங்களவை விதி எண் 188-இன் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தாக்கீது அளிக்கிறேன். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment