சென்னை இராணி மேரி கல்லூரியில் 5 லட்சம் விதை பைகள் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டன அரசுப்பள்ளி மாணவர்கள் உலக சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

சென்னை இராணி மேரி கல்லூரியில் 5 லட்சம் விதை பைகள் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டன அரசுப்பள்ளி மாணவர்கள் உலக சாதனை

 சென்னை இராணி மேரி கல்லூரியில் 5 லட்சம் விதை பைகள்

5,000 மரக்கன்றுகள் நடப்பட்டன அரசுப்பள்ளி மாணவர்கள் உலக சாதனை

சென்னை, மார்ச் 12- சிற்பி திட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியை சேர்ந்த 5,000 மாணவ - மாணவிகள் சுமார் 5 லட்சம் விதை பைகளை தயாரித்தும், மரக்கன்றுகளை நட்டும் உலக சாதனை படைத்துள்ளனர்.

 சென்னை ராணி மேரி கல்லூரியில் சென்னை பெருநகர காவல் துறை சிற்பி திட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் "இயற்கையை பேணுவோம்" என்ற தலைப்பின் கீழ் 5 லட்சம் விதை பந்துகளை தயாரித்து தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில், விதை பந்துகளை வனத்துறையிடம் வழங்கிய தோடு, 5000 மரக்கன்றுகளை நட்டும் உலக சாதனை படைத்தனர்.

No comments:

Post a Comment