இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42 விழுக்காட்டினர் தமிழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

இந்திய பெண் உற்பத்தியாளர்களில் 42 விழுக்காட்டினர் தமிழர்கள்

சென்னை, மார்ச் 15- நாடு முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கள் என மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்ட மைப்பின் சென்னை மகளிர் பிரிவு சார்பில் பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் கடந்த 7.3.2023 அன்று நடைபெற்றது.

கூட்டமைப்பின் சென்னை கிளைத் தலை வர் பிரசன்னா வசநாடு தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 8 பெண்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: 

தமிழ்நாடு சமூக வளர்ச்சியிலும், கல்வி யிலும் சிறந்து விளங்குகிறது. மகளிருக்கு சம உரிமை கொடுக்கக் கூடிய சட்டம் இயற்றப் பட்டதன் காரணமாக அதற்கான பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் தொழில்துறையில் முன்னேறி இருப்பது அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கல்வி மற்றும் வாழ்க்கையிலும் பெண்களின் வழிகாட்டல் மிக முக்கியமானதாக இருந்தது. அவர்கள் கொடுத்த பயிற்சியால், எனது தந்தை நடத்தி வந்த நிறுவனத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் வளர்ச்சிப் பாதை யில் கொண்டுசெல்ல முடிந்தது. ஒவ்வொரு வரின் வாழ்க்கையிலும் மகளிரின் பங்களிப்பு விலை மதிப்பற்றதாக உள்ளது.சாதனையா ளர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அந்தளவு சமூகம் பொருளாதாரம், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் அடைகிறது என்றார் அவர்.

விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழக நிர்வாக இயக்குநர் மரியஜீனா ஜான்சன், கூட்ட மைப்பின் மூத்த துணைத் தலைவர் சுதா சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment