தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.364 கோடி தமிழ்நாடு அரசு அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.364 கோடி தமிழ்நாடு அரசு அளிப்பு

சென்னை, மார்ச் 3 தனியார் பள்ளிகளுக்கு 2021-2022-ஆம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364 கோடியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 8 ஆயிரத்துக் கும் மேலான தனியார் பள்ளிகளில் 3.98 லட்சம் குழந்தைகள் படித்து வருகின் றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணம் தனி யார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தரப்படும். 

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக் கான கல்விக் கட்டண நிலுவையை துரித மாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு தனியார்பள்ளி நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்திருந்தனர். அதையேற்று தனியார் பள்ளிகளுக்கு 2021-2022-ஆம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகைரூ.364.43 கோடிக்கான நிதியை தமிழ்நாடு அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 3.98 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இதுதவிர நடப்பு கல்வி யாண்டுக்கான (2022-2023) கல்விக் கட்டண நிலுவைத் தொகையும் விரைந்து வழங்கப் பட உள்ளது.


No comments:

Post a Comment