டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது

புதுடில்லி மார்ச் 16 நாடு முழுவதிலிமிருந்து விவசாய அமைப்பினர் மார்ச் 20இல் தேசிய தலை நகரில் கூடிப் போராட்டம் நடத்த உள்ளனர்.

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ஆம் தேதி வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டில்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அந்த மசோதாக்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.

அப்போது, தங்களது பிற கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் போராட் டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரித் திருந்தனர். இந்தச் சூழ லில், நாடு முழுவதிலும் உள்ள விவசாய சங்கங் களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாரதிய கிசான் மோர்ச்சா (பிகேஎம்) தனது மகாபஞ்சாயத்தை அரியானாவின் ஜிந்தில் கூட்டியது.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநில விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன.அடுத்து பிப்ரவரி 9-ஆம் தேதி அரியானாவின் குருஷேத்ராவிலும் ஒரு மகாபஞ்சாயத்து கூடி யது. இதைத் தொடர்ந்து மூன்றாவதாக,  யுனைடெட் கிசான் மோர்ச்சா (யுகே எம்), உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் கூடி, டில்லியில் போராட் டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது. இதன் கோரிக்கைகளாக, சுவா மிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின் சார சட்டதிருத்த மசோதா- 2022 திரும்பப் பெறுதல், ஓய்வூதியம் ஆகியவை முக்கியமான வைகளாக உள்ளன. லக் கிம்பூர்கேரி யில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்ற புகாரில் கைதா னவரின் தந்தையான அஜய் மிஸ் ராவை அமைச்சர் பதவியிலி ருந்து நீக்குவதும் ஒரு கோரிக்கையாக உள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் போது இறந்த 740 விவசாயி களுக்கு நிவாரணநிதி, குறைந்த பட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கை களும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து யுகேஎம் தலைவர் யுத்வீர் சிங் கூறும் போது, "நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் டில்லியில் கூடி மார்ச்- 20 ஆம் தேதி போராட்டம் நடத்துவார்கள். இந்தப் போராட்டம் காலவரையின்றி தொடருமா? என் பது அப்போது முடிவு செய்யப்படும். எங்கள் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட் டால், தொடர் போராட் டத்திற்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். இந்த மூன்று பஞ்சாயத் துக்களிலும் விவசாய சங்கங்களின் முக்கியத் தலைவர்களாக ராகேஷ் திகாய்த், தர்ஷன் பால், ஜோகிந்தர் சிங் உக்ரா ஹன், ஜரீந்தர் சிங் லோகா வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment