தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமநாதபுரம், மார்ச் 12 தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.   தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் 16 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment