100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை, மார்ச் 29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- 

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை  திருத்தி அறிவித்துள்ளது. மார்ச் 25 அன்று வெளியான அரசிதழ் அறிவிப்புப்படி தமிழ்நாட்டில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.294  ஊதியம் வழங்க வேண்டும்.

"வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை  பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர் களின் குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க வேண்டும்" என விவசாயத் தொழிலாளர்களும், தொழிற்சங்க அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசின் ஊதிய அறிவிப்பு பெருந்த ஏமாற்றமளிக்கிறது. பாஜக ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கி, அழித் தொழிக்கும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.  திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்க ளுக்கு தலா 100 நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூ. 2.74  லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொருளாதார  வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து வந்த பாஜக ஒன்றிய அரசு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது.

இந்த நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான அளவில் உயர்த்தாமல், விவசாயத் தொழிலாளர்கள் உள் ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசை கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர் ணயித்து வழங்க வேண்டும். -இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.

No comments:

Post a Comment