சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு

சென்னை, மார்ச் 14 3.12.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அயனாவரம் கலிகி  அரங்க நாதன் மாண்ட் போர்ட் மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு விழா சிறப்பாக நடை பெற்றது.

பள்ளியின் முதல்வர் ஜெ.இராபின்சன் தலைமையேற்றார். அவர் தனது தலைமையுரையில் தந்தை  பெரியாரைப்  பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை எடுத்து ரைத்தார்.  

தமிழாசிரியர் ப.சு.பிரேமா முன் னிலையேற்றார். 

அனைவரையும் ஆசிரியர் எழிலரசி வர வேற்று பேசினார்.

பெரியார் 1000 வினா-விடை ஒருங்கிணைப் பாளர் கோவி.கோபால், பங்கேற்பாளர்களை அறி முகப்படுத்தி உரையாற்றினார்.

எழுத்தாளர் கோவி.லெனின்  தேர்வில் முதல் மூன்று இடங்களைப்  பிடித்த மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பேசினார். 

அவர் தனது உரையில், இன்று (3.12.2022) மாற்றுத் திறனாளிகள் தினம். அவர்களின் முன் னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. அதை போலவே, நூறாண்டுகளுக்கு முன்பாக ஒரு சமூகமே , படிக்கக் கூடாது, தெருக்களில் நடக்கக் கூடாது  என்றெல்லாம் மதத்தின் பெயரால் ஜாதி யின் பெயரால் முடக்கப்பட்டு இருந்தனர். அதனை மாற்றி தமிழ் சமூகத்தின் ஜாதி, மதம், மூட நம்பிக்கைகள் எனும்  நோய்களை எதிர்த்துப் போராடியவர் தந்தை பெரியார் என்று கூறினார். பெண் கல்வியின் அவசியத்தை பெற்றோர்களிடம் வலியுறுத்தியவர் பெரியார் . அதன் விளைவுதான் இன்று இவ்வளவு பெண்கள் சிறப்பாக படிக்கின் றனர் என்று விளக்கினார். மாணவர்களும், ஆசி ரியர்களும் கையொலி எழுப்பி வரவேற்றனர்.

ஊடகவியலாளார் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், இந்ததேர்வானது, அரசுப்  பணிகளுக் கான போட்டி தேர்வுகளுக்கு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை விளக்கினார். மாணவிகள் உடை பற்றிய பெரியாரின் கருத்துக்களை எடுத்துக்  கூறினார். 

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் 

ம.இரவிபாரதி, பெண்களின் விடுதலைக்காக பெரியாரின் போராட்டங்களையும், அவரின் கருத்துகளையும் விளக்கினார்.

பள்ளியின் முதல்வர், மற்றும் தேர்வு  சிறப்பாக நடைபெற உதவிய ஆசிரியர்களுக்கு அய்யாவின் நூல்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. 

சென்னையில் நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை தேர்வுகளில் இப்பள்ளியில்தான் அதிக மாணவர்கள் (513 பேர்) கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கு நினைவுப் பரிசாக தந்தை பெரியார் படத்தினை கோவி.லெனின், பிரின்சு என்னாரெசு பெரியார், கவிஞர் இரவிபாரதி  ஆகியோர், பள்ளி முதல்வரிடம் வழங்கினர் . 

தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ் களை ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், வழக்கு ரைஞர் இரவிபாரதி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந் தினர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக முதல்வர் அவர்கள் பாராட்டி, பொன்னாடை போர்த்தி  நூல்கள் வழங்கினர் .

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழாசிரியர் சுபப்ரியா அனைவருக்கும் நன்றி கூறினார்.

பெரியார் 1000 வினா-விடை தேர்வு சிறப்பாக நடைபெற உதவிய பள்ளியின் துணை முதல்வர் உஷா சத்தியமூர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா, தமிழாசிரியர்கள் கலைச் செல்வி, மகாதேவன் ஆகியோருக்கு தந்தை பெரியாரின் நூல்களை கோவி.லெனின் வழங்கி சிறப்பு செய்தார். 

No comments:

Post a Comment