சமூகவலைதளங்களில் சிறுபான்மையினர்மீது கடுமையான வெறுப்புப் பரப்புரை செய்தவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனமா? தலைவர்கள், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

சமூகவலைதளங்களில் சிறுபான்மையினர்மீது கடுமையான வெறுப்புப் பரப்புரை செய்தவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனமா? தலைவர்கள், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் எதிர்ப்பு

சென்னை, பிப்.5 யூடியூப் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை வழக்குரைஞர் விக்டோரியா  கவுரி மேற்கொண்டு வந்தார்

மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் குறித்தும் வெறுப்பு பரப்புரை மேற்கொண்டுள்ள அவர் ரோமன் கத்தோலிக் கர்கள் மோசமான செயல் களில் ஈடுபடுவதாகவும், மேலும் கிறிஸ்தவ பாடல்களுக்குப் பரதநாட்டியம் நடத்தக்கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந் திருக்கிறார். 

இவர் பேச்சுகளும் எழுத்துகளும் வகுப்பு வாத மோதலை தூண்டக் கூடிய வகையில் அமைந்துள் ளதால் அவர் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும் மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்

இவரின் இத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துகள் அடிப்படை அரசமைப்பு விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இவரின் கொள்கை ரீதியிலான மத வெறிசிந்தனை ஆபத்தானது. 

இதன் அடிப்படையில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றவர் என்று முன் னணி வழக்குரைஞர்கள் கருதுகின்றனர்.

 அவர் நீதிபதியானால் அவரது கொள்கை நிலைப் பாட்டிற்கு எதிராக உள்ள யாருக்கும் அவரது நீதிமன் றத்தில் நீதியைப் பெற முடியுமா என்றும் முன்னணி வழக்குரைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தின் மீது இத்தகைய கடும் விரோத போக்கைக் கொண் டிருக்கும் ஒருவரை கொலி ஜியத்தின் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது என்று மூத்த வழக்குரை ஞர்கள் என்.ஜி. ஆர். பிரசாத், வைகை, வி.சுரேஷ் உள் ளிட்ட 21 வழக் குரைஞர்கள் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் மூன்று முக்கிய நீதிபதி களுக்கு தனித் தனியாக தங்கள் பரிந்துரைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக மேனாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பீட்டர் அல் போன்ஸ் கூறும் போது பாஜக வின்முழுநேர செயல் பாட்டாளராக, இஸ்லாமிய ,கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினரை மிகவும்தரக்குறைவாக விமர்சித்து வெறுப்பை உமிழ்ந்துவரும் வழக் குரைஞர் லஷ்மண சந்திரா விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்றத் தின் நீதிபதியாக நியமனம் செய்யவேண்டாம் என்று அனைவரும் குடியரசுத்தலை வருக்கு கடிதம் எழுதுவோம் என்றார். 

அதே போல் வழக்குரைஞர் விக்டோரியா கவுரியைச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கும் கொலிஜியத் தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் வலி யுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment