வெளியீடு
தமிழ்நாடு சுகாதார அலுவலர் தேர்வுக்கான அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆய்வு
காவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் அது தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
படிப்புகள்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் புதியதாக நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கான சான்றிதழ் பாடங் கள், பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக் கலை செடிகள் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள், அய்ட்ரோ போனிக்ஸ் முறையில் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழித் தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் ஆகிய பட்டயப் படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உத்தரவு
மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்புக்கு சொத்து வரி செலுத்த ரேஷன் கார்டு எண்ணை புதிய மென்பொருளில் பதிவேற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
பயணம்
ஆசாதி சாட்-2 செயற்கைக்கோள் சிப்களை தயாரித்த திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவர்கள் 10 பேர், நாளை இஸ்ரோ செல்ல உள்ளனர்.
எதிரானது
குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு கன்னித் தன்மை சோதனை நடத்துவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுப்பிக்க
வணிகர்கள் தங்கள் தொழில் உரிமங்களை ஏப்ரல் 31ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.