குஜராத்தில் திருவள்ளுவர் சிலை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

குஜராத்தில் திருவள்ளுவர் சிலை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்


அகமதாபாத், பிப்.13 குஜராத் மாநிலம் மணிநகரில் திருவள்ளுவர் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள சிறீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வி.ஜி.சந்தோஷம், மல்லைத் தமிழ் சங்கத் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதேபோல், குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

No comments:

Post a Comment