அதானி விவகாரம் : விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திடுக! காங்கிரஸ் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

அதானி விவகாரம் : விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திடுக! காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி,பிப்.9- ‘அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் 7.2.2023 அன்று மீண்டும் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.

பங்குகளின் விலையை உயர்த் திக் காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தை களில் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரு மளவில் சரிந்தன. இதனிடையே, அதானி குழுமத்தின் கீழ் செயல் படும் நிறுவனங்களில் எல்அய்சி, எஸ்பிஅய் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதிக அள வில் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளர் களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை கையிலெ டுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த மோசடி புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. இதன் காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 6.2.2023ஆம் தேதியன்றும் நாடா ளுமன்றம் முடங்கியது.

இந்த நிலையில், மாநிலங் களவையில் 7.2.2023 அன்று நடை பெற்ற குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தின்போது, அதானி விவகாரத்தை மாநிலங் களவை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் மீண்டும் எழுப்பினார்.

அப்போது பேசிய அவர், ‘ஒன்றிய அரசின் அமிர்த கால திட்டங்கள் மூலமாக ஒட்டுமொத்த நாட்டில் 21 பேர் மட்டும் 70 கோடி மக்களுக்கு இணையான சொத்து களை தன்வசப்படுத்தி பலனடைந் திருக்கின்றனர்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், ‘இந்தக் கருத்து தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் எழலாம்’ என்றார்.

அதற்கு ஒப்புக்கொண்ட திக் விஜய் சிங் தொடர்ந்து பேசினார். அப்போது, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு வெளி வந்த பிறகு ‘எலாரா கேபிடல்’ நிறுவனத்திலிருந்து பிரிட்டன் மேனாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சகோதரர் பதவி விலகியது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹிண்டன்பர்க், அரசியல் தொடர் புகள் மூலமாக இந்திய அரசிட மிருந்து அதானி குழுமம் ஆதாயங் களைப் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தெளிவான அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பங்கு பரிவர்த் தனை வாரியமும் (செபி) எந்த வொரு அறிக்கையையும் வெளியிடாதது கேள்வியை எழுப்புகிறது. இவர்களின் அமைதி, ஒன்றிய அரசிடமிருந்து அதானி குழுமம் ஆதாயம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

குறிப்பாக, அமிர்த காலத்தில் பலன் பெற்றவர்களின் ஆதாய மானது 121 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது. 50 சதவீத தொழில திபர்கள் 65 சதவீத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தாக்கல் செய்யும் நிலையில், அமிர்த காலத்திலிருந்து பலனடைந்த 10 சதவீதம் பேர் 3 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே செலுத்துகின்றனர். மேலும், இந்தக் காலத்தில் அளிக்கப்பட்ட ரூ. 86.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி திட்டத்தில், அதானி குழுமத்துக்கு மட்டும் ரூ.84,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏழை களுக்கும், விவசாயிகளுக்கு எந்தவித கடன் தள்ளு படியும் செய்யப்பட வில்லை.

இந்தச் சூழலில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்த விதி எண்.267-இன் கீழ் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து உலகமே இன்று தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதுகுறித்து விவாதிக்க முடியவில்லை. உலக அளவில் நடைபெறும் விவாதத் தின்படி, முதலீட்டாளர்கள் 

ரூ. 2.07 லட்சம் கோடி வரை இழந் திருக்கலாம் என்று தெரியவருகிறது. எனவே, இதுகுறித்து நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டும்.  மேலும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசா ரணை நடத்த நாடா ளுமன்ற கூட் டுக் குழுவை அமைக்க வேண்டும்.

அதுபோல, கருப்புப் பணம் மீதான சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை மற்றும் பல்வேறு நாடு களில் பணம் பதுக்கிய பிரபலங் களின் பெயர்கள் அடங்கிய பனாமா பேப்பர்ஸ் மீதான விசா ரணை நிலை குறித்தும் நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தெரி விக்கவேண்டும் என்று வலியுறுத் தினார்.

No comments:

Post a Comment