மருத்துவத் தகவல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

மருத்துவத் தகவல்கள்

 மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நாவிற்கு சுவையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நச்சு கிருமிகள் உள் நுழைவதை தடுக்கிறது.

முதுமை ஏற்படுவதை தடுத்து உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. புற்று நோய் வருவதை தடுக்கிறது. மாம்பழம் ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்பட்டு உடலில் எந்த வித நோயும் நெருங்காமல் பாதுகாக்கிறது.

இரத்த சோகையை போக்கும்

மாம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்ததில் கலந்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உலோகம், விஷப்பொருட்களை வெளியேற்றி உடலுக்கு சக்தியை தருகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

பித்தம் அதிகமாக உள்ளவர்கள் மாம்பழச் சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அதிகாலையில் அருந்தி வந்தால் குடலில் உள்ள பித்தநீரை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கும். மேலும் இரத்தமும் சுத்தமாகும்.

உடலில் தடிப்பு, மஞ்சள் காமாலை இருந்தாலும் மேலே குறிப்பிட்டது போல் அருந்திவந்தால் கல்லீரல் சுத்தமாகி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சளித்தொல்லையை போக்கும்

 சளித்தொல்லை அதிகமாக இருப்பவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லையை முற்றிலிமாக தவிர்க்க முடியும். குளிர் காலத்தில் ஏற்படும் சளி தொந்தரவை கூட கட்டுபடுத்த முடியும்.

சிலருக்கு மாம்பழம் சாப்பிட்டால் சளி, இருமல் வரும். அவ்வாறு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தினால் போதும். இதனால் உடலில் உள்ள சளி கரைந்து வெளியேறிவிடும்.

நரம்பினை பாதுகாக்கும்

மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நரம்பிற்கு ஆரோக்கியம் கொடுத்து, நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஜீரண சக்தியை தரும்

நாம் உண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் தொல்லை கொடுக்கும். அவ்வாறு உள்ளவர்கள் அடிக்கடி மாம்பழம் எடுத்துக் கொண்டால் உணவு நன்றாக ஜீரணமாகி வெளியேறிவிடும்.

உடல் எடையை அதிகரிக்க

மாங்காய் ஆக இருந்தாலும் சரி, மாம்பழம் ஆக இருந்தாலும் சரி தினம் இரண்டு வீதம் எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு டம்ளர் பாலும் சேர்த்து அருந்துவது நல்லது. அதற்கு பிறகு மற்ற உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது விருப்பம். இப்படி சாப்பிடுவதால் மாம்பழத்தின் மூலமாக இரும்புச்சத்தும், பால் மூலமாக கிடைக்கும் கால்சியம் சத்தும் உடலில் நன்கு கலந்து உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடை பருமனாக மாறாத அளவிற்கு பாதுகாக்கிறது.

இதயத்தை பாதுகாக்கும்

மாம்பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ அருந்திவந்தால் இதயத்திற்கு நல்லது. இது இதய தசைகளை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

பழுத்தாலும் பச்சை நிறத்தில் காணப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிடும் பொழுது அது ரத்தத்தில் கலந்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாத்து புதிய இரத்த அணுக்களை உருவாக்குகிறது. மாம்பழத்தை தினமும் எடுத்துக்கொண்டால் ரத்தசோகை, காலரா, சீதபேதி போன்ற நோய்கள் குணமாகும். மேலும், வேறு எந்த நோயும் உடலில் வராமல் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்து உடலின் திசுக்களை சிதைக்கும் ஃப்ரீராடிக்கல் என்ற திரவத்தினை உறிஞ்சி வெளியேற்றிவிடுகிறது. உடல் சக்தி பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.

மூட்டு பாதுகாப்பு

மாம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் மாம்பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மூட்டு வலியை போக்குகிறது. மேலும், உடலில் நரம்புத்தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

எலும்பு, பல் பாதுகாப்பு

எலும்பு, பல் பாதுகாப்பிற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது கால்சியம்சத்து. மாம்பழம் சாப்பிடுவதால் மாம்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலிலுள்ள கால்சியம் சத்தினை சீராக நிர்வகித்து எலும்பையும், பற்களையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. மேலும் நமது உடம்பில் கால்சியம் சத்து குறையாமல் இருக்க உதவுகிறது.

ஞாபக சக்தி

மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தும், வைட்டமின் ஈ சத்தும் மூளைக்கு செல்லும் நரம்பு பகுதிகளை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது இதனால் மூளையை ஆரோக்கியமாக செயல்பட்டு ஞாபகமறதி நோய் வராமல் தவிர்க்கிறது.

மகிழ்ச்சியைத் தரும்

நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு உங்களை அறியாமல் உடலுக்கு ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும். இதற்கு காரணம் மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்து உடலில் உள்ள திசுக்களில் கலந்து ஒரு வேதியியல் மாற்றம் நடக்கிறது.

இதனால் உடலில் ரத்தம் கிடைக்காத பகுதியிலும் ரத்தமும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறுவதால் தசை பகுதியும், நரம்பு மண்டலமும் புத்துணர்ச்சியாக செயல்படுகிறது. அதனால் மன அழுத்தம், மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் தென்படும்.


No comments:

Post a Comment