ஆஸ்திரேலியா வரை எதிரொலித்துள்ளது அதானியின் மோசடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

ஆஸ்திரேலியா வரை எதிரொலித்துள்ளது அதானியின் மோசடி

ஆஸ்திரேலிய குடிமக்களின் ஓய்வூதிய சேமிப்பு நிதி பாதிப்பு : கார்டியன் பத்திரிகை தகவல்

கான்பெர்ரா,பிப்.25- அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறு வனம் குற்றம்சாட்டியது. பங்குச் சந்தையிலும் முறைகேட்டில் ஈடு பட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகளின் விலையை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீசியஸ், அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறு வனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இத னால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்து 22-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய்கள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு விசாரணையை தொடங்குவதாக அறிவித்தது. அதோடு இந்திய ரிசர்வ் வங்கியும் அதானியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விசாரணைக்கு உத் தரவிட்டுள்ளது. 

மேலும் உச்சநீதி மன்றமும் மேனாள் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட் டாளருமான ஜார்ஜ் சோரஸ் அதானியின் வீழ்ச்சி இந்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கான, ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கக்கூடும் எனக் கூறியிருந்தார்.அதைத் தொடர்ந்து கவுதம் அதானியின் மூத்த சகோ தரர் வினோத் அதானி சிங்கப் பூரைச் சேர்ந்த நிறுவனம் மூலம் ரஷ்யாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. இவர் பிற நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று அதை அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் தொடர் சரிவின் கார ணமாக, ஆஸ்திரேலிய பொதுமக் களும் ஓய்வூதிய சேமிப்பு நிதி களைப் பாதித்துள்ளதாக பிரபல பிரிட்டன் பத்திரிகையான கார்டி யன் கூறியுள்ளது. 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஆஸ்தி ரேலியாவின் 243 பில்லியன் டாலர்  ப்யூச்சர் பண்ட், காமன்வெல்த் வங்கியின் ப்யூச்சர் பண்ட் ஆகி யவை அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள் ளது.

மேலும், ஆஸ்திரேலிய மாகா ணமான குயின்ஸ்லாந்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூ தியம் தொடங்கி காமன்வெல்த் வங்கி ஊழியர்களின் ஓய்வூதியம் வரை அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கார ணமாக அதன் மதிப்பு கள் கடு மையாக அடிவாங்கியிருப்ப தாகவும், இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment