நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!

புதுடில்லி, பிப்.25- ‘நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வை மருத்துவ மாண வர் சேர்க்கைக்கான அடிப்படை தகுதியாக நிர்ணயித்திருப்பது அர சியல் சாசனத்துக்கு எதிரானது என பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தது.

நீட் தேர்வு, அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்துவிட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. நீட் தேர்வு கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானதாகவும், கல்வி மீதான மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வலுவான ஆதாரங்கள் இல்லாமல் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது போடப்பட்ட மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசு சார்பில் 23.2.2023 அன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

 அந்த மனு நேற்று (24.2.2023) விசாரணைக்கு வந் தது. அப்போது நீட் விலக்கு கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் முந் தைய மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள தையும் அவர் சுட்டிக்காட்டினார். முந்தைய மனுவை எந்த அடிப் படையில் தாக்கல் செய்தனர்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முந்தைய மனுவை திரும்பப் பெறுவது நல்ல முடிவு என்று தெரிவித்தனர்.

முந்தைய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தாக்கல் செய்யப்பட் டுள்ள புதிய மனு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment