ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு

புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என நிர்ணயிக்க வேண்டுமென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி 3 ஆண்டுகள் என்றும், அதன் பின் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வி நிலை இடம்பெற்றுள்ளது.  இதில் புதிய கல்விக் கொள்கை, ஆரம்ப கல்வி முதல் இரண்டாம் வகுப்பு வரை தடையற்ற கற்றலையும், குழந்தைகளின் வளர்ச் சியையும் ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.   

இதற்கு அங்கன்வாடி அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஆரம்பக் கல்வி மய்யங் களில் மூன்று ஆண்டு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். 

இதற்கு ஏற்ப 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.


No comments:

Post a Comment