'நீட்' தேர்வால் மேலும் ஓர் உயிரிழப்பு ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

'நீட்' தேர்வால் மேலும் ஓர் உயிரிழப்பு ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை

ஜெய்ப்பூர், பிப்.25 ராஜஸ்தானில் நீட் தேர் வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மய்யத்தில் படித்து வந்தார். அங் குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பயிற்சி மய்யத்திற்குச் செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். 

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாக வும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார். 

படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறியுள்ளார். கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத் தியுள்ளது. 

கோட்டா நகரில் இந்த ஆண்டு இது வரை 4 மாணவர்கள் தற்கொலை செய் துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment